தொடர்ச்சியான கழுத்து வலி புற்றுநோயின் அறிகுறியா? இத முதலில் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தற்போது இருக்கும் தவறான வாழ்க்கை முறை காரணமாக உலகம் முழுவதும் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது.
இன்றைய காலத்தில் எவ்வளவு தான் மருத்துவ சிகிச்சை முன்னேறியிருந்தாலூம், புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சையை கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்த வகையில், 2020-ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் இறந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிடடுள்ளது.
உடலில் ஏகப்பட்ட வலிகள் வரும் அதில் சிலது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இதன்படி, சளி பிரச்சினையுள்ளவர்களுக்கு அடிக்கடி வரும் கழுத்து வலி புற்றுநோயின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
புற்றுநோயின் அறிகுறியாக கழுத்து வலி?
இந்த வியாதி இயற்கையாக எல்லாருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான்.
அமரும் போது தவறான பழக்கத்தை கடைப்பிடிக்கும்
பொது கழுத்து வலி வருவது வழமை.
இதனை தொடர்ந்து புற்றுநோய் இருப்பதை எவ்வாறு கண்டறியலாம் என தொடர்ந்து பார்க்கலாம்.
கழுத்து புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்:
1. வரண்ட தொண்டை
2. தலைவலி
3. தீராத கழுத்து வலி
4. மூச்சுவிடுவதில் அல்லது பேசுவதில் சிரமம்
5. முகம் அல்லது நாக்கில் குணப்படுத்த முடியாத கொப்புளம்
6. தாடைப்பகுதி அல்லது கழுத்தில் வீக்கம்
7. மூக்கில் ரத்தம் கசிதல்
8. காதில் வலி ஏற்படுதல் அல்லது தொற்று
9. உணவை விழுங்குவதிலோ அல்லது சவைப்பதிலோ சிரமம்
10. முகத்தில் அல்லது மேற்புற பல்லில் வலி
11. ரத்தம் கலந்த எச்சில்
முக்கிய குறிப்பு
இரசாயன நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. அகவே முடிந்தவரையில் இரசாயன பொருட்கள் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.