Cetzine மாத்திரைகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
காய்ச்சல், வலி மற்றும் தோல் அலர்ஜி போன்றவற்றிற்கு மருந்தாகிறது Cetzine மாத்திரைகள்.
ஆன்டி ஹிஸ்டமைனாக செயல்படுவதுடன் நோய்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
இதுதவிர மூக்கு ஒழுகுதல், தும்மல், அரிப்பு மற்றும் கண்களில் நீர் கோர்த்தல் போன்றவற்றையும் சரிசெய்கிறது.
உணவுடன் அல்லது உணவு இல்லாமல் Cetzine மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
உங்களது நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுகளில் மட்டுமே எடுத்துக் கொள்ளவும்.
பெரும்பாலும் மாலை நேரங்களில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது, மருத்துவர் கூறிய நாள் முழுமையும் எடுக்கவும், சுயமாக மருந்துகளை நிறுத்துவது நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம்.
Cetzine மாத்திரைகளை பாதுகாப்பானது என்றாலும் தூக்க கலக்கம் மற்றும் மயக்கம் பக்கவிளைவுகளாக இருக்கும்.
இரண்டு நாட்களில் Cetzine மாத்திரைகளுக்கு உடல் ஒத்துழைக்க தொடங்கலாம்.
Cetzine மாத்திரைகள் பயன்படுத்தும் போது ஆல்கஹால் எடுக்க வேண்டாம்.
சிறுநீரக நோயாளியாக இருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும். குறிப்பாக வேறு ஏதேனும் மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்,
பக்கவிளைவுகள் இருக்காது என்ற பட்சத்திலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுப்பது ஆபத்தை உண்டு பண்ணலாம்.