கோடைக்காலம் வந்தாச்சு! இனி மூலாம்பழத்திற்கு தட்டுபாடாக தான் இருக்கும்..ஏன் தெரியுமா?
பொதுவாக கோடைகாலம் வந்து விட்டால் தேவையற்ற நிறைய பிரச்சினைகள் உடம்பில் வரும். கோடைக்காலம் வந்து விட்டால் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.
அதாவது உடம்பில் சூடு அதிகரிக்கும் அதனை குழந்தைகளால் தாங்க முடியாத நிலையில் ஏற்படும். இதன் காரணமாக சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காக குழந்தைகளை எப்போதும் குளிர்ச்சியாக வைத்து கொள்வது அவசியம். இதனால் அவர்களுக்கு முறையான உணவு பழக்கங்கள், இரண்டு தடவைகள் குளிக்க வைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது கட்டாயமானதாகும்.
அந்த வகையில் கோடைக்காலத்தில் ஏற்படும் விளைவுகளை மூலாம்பழம் எவ்வாறு தடுப்பது என தொடர்ந்து பார்க்கலாம்.

மூலாம்பழம் செய்யும் யாமறியாத வித்தைகள்
1. முலாம்பழத்தில் அதிகமான வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. தொற்றுக்கள் பரவுதல், உடல் சூட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் குறையும்.
2. நீர்ச்சத்துக்கள் உடம்பில் குறையும் போது சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதற்கு தினமும் முலாம்பழம் சாப்பிட்டால் போதுமாம். காரணம் இந்த பழத்தில் அதிகமான சைலோகைன்கள் உள்ளது.

3. உடலில் சூடு அதிகரிக்கும் போது மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுகிறது. மூலாம்பழம் சாப்பிடுவதால் அதிலிருக்கும் நீர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் இதனை சீராக பேணுகிறது.
4. கோடைக்காலங்களில் சருமத்தில் வறட்சி, வேர்க்குரு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு மூலாம்பழம் பேஸ் பேக் ஒன்றை செய்து தினமும் முகத்தில் ஆப்ளை செய்து வந்தால் காலப்போக்கில் இந்த பிரச்சினை மறையும்.
5. இதய நோய், தலைமுடி வளர்ச்சி, மன அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் அதிகரிக்கும் போது நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளுடன் இந்த மூலாம்பழத்தையும் சேர்த்து கொள்வது ஆரோக்கியமாக இருக்கும்.