வாழைப்பழத் தோல் சாப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்... இந்த விடயம் தெரிந்தால் தூக்கி எறிய மாட்டீங்க
நாம் சில பழங்களை உண்ணும் போது தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது வழக்கம். அப்படி தூக்கி எறியும் பழத்தோல்களில் இருக்கும் நன்மைகள் பற்றி அறிந்திருக்க மாட்டோம். இதில் நாம் வாழைப்பழத்தோலில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் இனி தூரப்போடவே மாட்டீர்கள்.
வாழைப்பழம்
வாழைப்பழம் என்றாலே சிலருக்கு அவ்வளவு பிடிக்கும். முக்கனிகளில் ஒரு பழமான வாழைப்பழம் அனைத்து சம்பிரதாய சடங்குகளுக்கும் முக்கியத்துவம் பெறும் பழமாகவே இருக்கும்.
வாழைப்பழத்தில் அதிகபடியான இரும்புச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் வாழைப்பழத்தை சாப்பிட்டால் ரத்த சோகை இல்லாமல் செய்து இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
ஆனால் நாம் வாழைப்பழத்தை எடுத்து பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி எறிவதால் உடலில் மிக முக்கிய பல சத்துக்களை தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால் இந்த வாழைப்பழத்தோல் இருந்தால் நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்கலாம்
மகிழ்ச்சிக்கு வாழைப்பழத்தோல்
பல சத்துக்கள் நிறைந்த இந்த வாழைப்பழத்தோலில் மகிழ்ச்சி உணர்வை தூண்டும் செரோடோனின் ஹார்மோன் அதிகமாகவே இருக்கிறது. இந்த ஹார்மோன் உங்கள் மனநிலையை மேம்படுத்தி உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
வாழைப்பழத்தோலை 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரோடோனின் அளவானது 15 சதவீதம் அதிகரித்து உடலை ரிலாக்ஸாக வைத்து நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
மேலும், வாழைப்பழத்தோலில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது செரிமானப் பிரச்சினைகளை தடுக்கும்.
வாழைப்பழத் தோல், கொலாஜன் உற்பத்திக்கு உதவும் சிலிக்காவைக் கொண்டுள்ளது, இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
வாழைப்பழத்தில் லுடீன் இருப்பதால் இது கண்பார்வையை அதிகரிக்கும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |