வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
முக்கனிகளில் மூன்றாவது பழமாக இருக்கும் வாழைப்பழம் பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தப் பழத்தை ஏழைகளின் பழம் என்றும் செல்லுவார்கள்.
இதில் மிக அதிகமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி டிரைப்டோபெனாக மாற்றப்பட்டு டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது.
இந்த வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ.பி.பி2, சி, பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளது.
வாழைப்பழத்தின் நன்மை
- வாழைப்பழமானது உடலில் உள்ள ஹோர்மோன் குறைப்பாடுகளை சரி செய்யும்.
- வாழைப்பழத்தில் இருக்கும் அதிகளவான பொட்டாசியம் மூளையின் திறனை அதிகரிக்கும்.
- நரம்புகளை சீராக வைத்திருக்கும்
- ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கும்
- உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்தும்
- உடம்பில் இருக்கும் செல்களையும், தூய்மையாகவும் ஊட்டச்சத்துடன் வைத்திருக்கும்
- வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து குடலை சீராக்குகிறது
- பித்தத்தை நீக்கும் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும்
- குடல் புண் வராமல் பாதுகாக்கும்
- பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்கும்
- நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்
- மாதவிலக்கு பிரச்சினைக்கு அதிகம் உதவும்
- வலுவான எழும்புகளைக் கொடுக்கும்
- சரும அழகை மேம்படுத்தும்
இப்படி பல நன்மைகளைக் கொண்ட வாழைப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா என்ற எண்ணம் பெரும்பாலும் எல்லோருக்கும் இருந்துக் கொண்டு தான் இருக்கும்.
எடையை அதிகரிக்குமா?
வாழைப்பழத்தில் உள்ள கலோரிகள் மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் குறைவு தான், உதாரணத்திற்கு 100 கிராம் வாழைப்பழத்தில் 80 கலோரிகள் இருக்கிறது, இதுவே 100 கிராம் அரிசி உணவில் 130 கலோரிகள் இருக்கிறது, எனவே வாழைப்பழம் நல்லதே.
அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் தவிர, அளவுடன் சாப்பிட்டால் வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்காது.
ஒரு நாளில் 5 அல்லது 6 க்கு மேற்பட்ட வாழைப்பழங்களை சாப்பிடக் கூடாது, இது உங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழம் நல்லதா?
வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை குறைக்கிறது. இது டைப் 2 நீரிழிவுவைத் தடுக்கிறது.
வாழைப்பழத்தில் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் குறியீடு 50 ஆகஉள்ளதால் இது இரத்த சக்கரையின் நுகர்வின் அதிகரிப்பின் அளவைத் தடுக்கிறது.
வாழைப்பழத்தில் சக்கரை அளவினை நார்ச்சத்து உணவுகள் மழுங்கடிக்கச் செய்கின்றது. அதனால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தினை சாப்பிடுவது நல்லது.
பச்சை நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பச்சை நிற வாழைப்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.
வாழைப்பழம் இன்சுலின் செயல்பாட்டினை மேம்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதற்கான டயட்டை பின்பற்றும் நபர்கள் மட்டும் வாழைப்பழத்தை தவிர்த்து விடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |