வாழைப்பழத்தோலை இனி வீசி விடாதீர்கள்: முகத்தில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் உடனே சரியாகிவிடும்!
நாம் சில பழங்களை உண்ணும் போது தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது வழக்கம். அப்படி தூக்கி எறியும் பழத்தோல்களில் இருக்கும் நன்மைகள் பற்றி அறிந்திருக்க மாட்டோம்.
இதில் நாம் வாழைப்பழத்தோலில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் இனி தூரப்போடவே மாட்டீர்கள்.
வாழைப்பழம்
வாழைப்பழம் என்றாலே சிலருக்கு அவ்வளவு பிடிக்கும். முக்கனிகளில் ஒரு பழமான வாழைப்பழம் அனைத்து சம்பிரதாய சடங்குகளுக்கும் முக்கியத்துவம் பெறும் பழமாகவே இருக்கும்.
வாழைப்பழத்தில் அதிகபடியான இரும்புச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் வாழைப்பழத்தை சாப்பிட்டால் ரத்த சோகை இல்லாமல் செய்து இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
மேலும், வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை கொடுக்கும்.
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களும் வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை இல்லாமல் போகும். வாழைப்பழத்தோல் வாழைப்பழத்தை எடுத்து பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி எறிவதால் நீங்கள் மிக முக்கிய பல சத்துக்களை தூக்கி எறிந்துவிடுகிறீர்கள் ஆனால் அதில் பாதி சத்துக்களை இழக்கிறோம் என்பது தெரியாது.
வாழைப்பழத்தோலால்
அத்தனை சரும பிரச்சினைக்கும் மருந்து உண்டு. அதாவது, வாழைப்பழத் தோல், கொலாஜன் உற்பத்திக்கு உதவும் சிலிக்காவைக் கொண்டுள்ளது, இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இது ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்ட பீனாலிக்ஸையும் கொண்டுள்ளது. எனவே கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்கள் முகத்தில் பிக்மென்ட் மற்றும் முகப்பரு தழும்புகளை குறைக்கவும் வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம்.
வாழைப்பழத்தோலின் உட்புறத்தை (வெள்ளை பகுதி) உங்கள் முகத்தில் மெதுவாக தேய்க்கவும். சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு வடுக்களை நீக்கும்.
மேலும், வாழைப்பழத்தோல் ஆக்ஸிஜனேற்றிகள், நார்சத்துகள் மற்றும் இன்னும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
இதனால் அது சருமத்தை பிரகாசமாக்கவும், சருமத்தை ஈரப்பதமாக்கவும் பெரிதும் உதவுகிறது.