ஒரு கிளாஸ் பாலில் அஸ்வகந்தா பொடி கலந்து குடித்தால் என்ன நடக்கும்? ஆண்கள் மட்டும் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக அஸ்வகந்தா எனப்படுவது மன அழுத்ததிற்கு பெயர் போன மூலிகையில் ஒன்று.
மன அழுத்தத்தினால் ஏற்படும் நடுக்கம், பதட்டத்தை குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதனை சாப்பிடுவதற்கு முன்பு ஒருவர் கட்டாயமாக மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையை பெறுதல் வேண்டும்.
ஏனெனின் மருத்துவ ஆலோசனைகளின்றி அஸ்வகந்தாவை எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் ஒரு டம்ளர் பாலில் அஸ்வகந்தா பொடி கலந்து குடித்தால் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
அஸ்வகந்தா பொடி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. அஸ்வகந்தா மூலிகையை சாப்பிட்டால் இரத்த குளுக்கோஸ் அளவுகள் குறையும். அத்துடன் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பயனுள்ள ஒரு மூலிகையாக இருக்கும்.
2. எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த பொடியை எடுத்து கொள்ளலாம். ஏனெனின் இந்த பொடியில் இருக்கும் சில பதார்த்தங்கள் தசை வளர்ச்சி மற்றும் தசையின் வலிமையை அதிகரிக்கிறது. தொடர்ந்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கிறது.
3. அஸ்வகந்தா சாப்பிடும் ஒரு நபரின் கவனிப்பு திறன் மற்றும் நினைவாற்றல் சிறந்த முறையில் இயங்கும்.
4. இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினையுள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் இதனை எடுத்து கொள்ளலாம். ஏனெனின் உடல் செயல்பாடுகளின் போது இதயம் மற்றும் நுரையீரலில் இருந்து தசைகளுக்கு செலுத்தப்படும் ஆக்ஸிஜனின் வேகத்தை அஸ்வகந்தா அதிகரிக்கிறது.
5. ஆண்களில் விந்தணுக்களின் தரம் குறையும் பட்சத்தில் இந்த பொடியை எடுத்து கொள்ளலாம். இதற்கு அஸ்வகந்தா பொடியை நெய், தேன் மற்றும் சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதத்திற்கு தினமும் சாப்பிட்டு வர வேண்டும். தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |