மூலிகை வயாக்ரா அஸ்வகந்தாவின் நன்மைகள்
பண்டைய காலம்தொட்டே மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகை அஸ்வகந்தா, இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விளைகிறது.
100 ஆண்டுகளுக்கு மேலாக அஸ்வகந்தாவின் வேர் மற்றும் பழம் மருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகிறது.
அஸ்வா என்றால் குதிரை என்று பொருள், அஸ்வகந்தா சாப்பிட்டால் குதிரையின் பலம் கிடைக்குமாம், மன அழுத்தத்தை குறைத்து உடலை வலுவூட்ட இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர புற்றுநோய், மறதி நோய், பதட்டம் போன்றவற்றிற்கும் மருந்தாகிறது அஸ்வகந்தா.
இந்த பதிவில் அஸ்வகந்தாவின் நன்மைகள், யார் எவ்வளவு சாப்பிட வேண்டும், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நன்மைகள்
- மன அழுத்தத்தை குறைப்பதில் அஸ்வகந்தா முக்கிய பங்காற்றுகிறது, பல ஆய்வுகளின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது, அஸ்வகந்தாவில் உள்ள பண்புகள் உடற்சோர்வு, மனச்சோர்வை நீங்கி நிம்மதியான உறக்கத்தை தருகின்றன.
- ரத்தத்தில் குளுக்கோசின் அளவை குறைக்கவும், ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளின் அளவை குறைக்கவும் அஸ்வகந்தாவை பயன்படுத்தலாம், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பான மருந்தாகிறது.
- அஸ்வகந்தாவை சாப்பிட்டு வந்தால் தசையின் வலு அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, அதாவது கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து தசையின் வலுவை அதிகரிப்பதுடன் உடலை பலப்படுத்துகிறது.
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை அஸ்வகந்தாவால் குணப்படுத்த முடியும், இதுமட்டுமின்றி பெண்கள் சந்திக்கும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு ம் அஸ்வகந்தா தீர்வாகிறது.
- ஆண்களில் மலட்டுத்தன்மையை போக்கி, குழந்தைபேறு கிடைப்பதை எளிதாக்குகிறது, மிக முக்கியமாக ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவை சீர்ப்படுத்துகிறது, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அஸ்வகந்தாவை பயன்படுத்திய ஆண்களில் 14 சதவிகிதம் பேருக்கு குழந்தைப்பேறு எளிதாக கிடைத்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு சாப்பிட வேண்டும்?
மாத்திரைகள், பவுடர் என பல வடிவங்களில் அஸ்வகந்தா கிடைத்தாலும் இதனை நாம் அளவுடன் மட்டுமே உட்கொள்ள வேண்டும், ஒருநாளைக்கு 250- 600 மில்லிகிராமுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது.
600 மில்லிகிராம் எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் ஒருநாளைக்கு இரண்டுவேளை என பிரித்து எடுத்துக்கொள்ளலாம், அதாவது காலை மற்றும் மாலை என இருவேளைகளில் எடுக்கலாம்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
எந்தவொரு காரணத்திற்காகவும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அஸ்வகந்தாவை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் அஸ்வகந்தா கருத்தடை மருந்தாக செயல்பட்டு கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
மருத்துவர்களின் ஆலோசனையின்றி குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள் இதனை சாப்பிட வேண்டாம், வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அஸ்வகந்தாவை உட்கொள்ள வேண்டாம்.
தொடர்ந்து நீண்ட காலத்துக்கு அஸ்வகந்தாவை பயன்படுத்தி வந்தால் தைராய்டு பிரச்சனைகள் வராமல் என கூறப்படுகிறது, ஏற்கனவே தூக்க மாத்திரை பயன்படுத்தும் நபர்கள் அஸ்வகந்தாவையும் சேர்த்து பயன்படுத்த வேண்டாம்.