அஸ்வகந்தா அதிகம் சாப்பிடாதீங்க! ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாம்
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட மஞ்சள் பூக்கள் கொண்ட ஒரு சிறிய புதர் செடியான அஸ்வகந்தா, சுமார் 6000 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்திய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
“அஸ்வம்’ என்றால் வடமொழியில் குதிரை என்ற அர்த்தத்தை குறிப்பிடுகிறது. ‘கந்தம்’ என்றால் கிழங்கு என்ற பொருளைக் குறிக்கிறது.
குதிரை பலத்தை அஸ்வகந்தா வழங்குகிறது என்பதால், இந்தப் பெயரை இது கொண்டுள்ளது.
ஆளி விதைகளை ஏன் சாப்பிட வேண்டும்? இதன் முக்கியமான பக்கவிளைவு பற்றி தெரியுமா?
அஸ்வகந்தா விற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல்வேறு பெயர்களும் உண்டு.
மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு, இந்த மூலிகை பல வகைகளில் நமக்கு நன்மை தருகிறது என்றாலும், சிலருக்கு விஷமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?
எனவே எப்படி சாப்பிட வேண்டும்? யார் எல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது? என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
அஸ்வகந்தா பக்கவிளைவுகள்
* அஸ்வகந்தாவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. அஸ்வகந்தா கருத்தடை மருந்தாக செயல்படுவதால், கர்ப்பிணி பெண்கள் இதை உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உண்டாகும்.
* மேலும் குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள் மறந்தும் கூட அஸ்வகந்தாவை உட்கொள்ளக்கூடாது. இதனால் இரத்த அழுத்தம் மேலும் குறையும் ஆபத்து உள்ளதால் உயிருக்கு ஆபத்தாக நேரிடும்.
* உங்களுக்கு வயிற்று பிரச்சனைகள் தொடர்பான நோய்கள் இருந்தால், அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
* வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டாலும் அஸ்வகந்தாவை உட்கொள்ள வேண்டாம்.
* அஸ்வகந்தாவை அதிகளவில் எடுத்துக்கொள்ளும் போது இரத்த உறைதல் தடைபட்டு இரத்தப்போக்கு அதிகரிக்கும், மலச்சிக்கல் அதிகரிக்கும், தூக்கம் அதிகரித்து சோம்பல் உண்டாகக்கூடும்.
* சில நேரங்களில் கல்லீரல் முழுமையாக அதன் செயல்திறனை இழக்க நேரிடலாம்.
* ஆண்கள் அதிக அளவில் எடுத்து கொண்டால், அவர்களது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும், அதில் முக்கியமானது விறைப்பு தன்மைதான். கூடவே தாம்பத்தியத்தில் அதிக நேரம் இவர்களால் செயல்படவும் முடியாமல் போகலாம்.
அஸ்வகந்தாவை எப்படி சாப்பிட வேண்டும்?
அஸ்வகந்தா பொடி செய்வதற்கு அஸ்வகந்தா வேர் தான் பயன்படுத்த வேண்டும். (தண்ணீரில் ஊற வைக்க கூடாது அப்படி வைத்தால் அதன் ஊட்டசத்துக்கள் கிடைக்காது)
அஸ்வகந்தாவை மூன்று முறை தண்ணீரில் கழுவிய பின்னர் வெயிலில் காய வைக்க வேண்டும்.
காய வைத்த பின்னர் தூய பசும் பாலில் காய வைத்த அஸ்வகந்தாவை சிறு சிறு துண்டுகளாக போட வேண்டும்.
பின்னர் அந்த பாலை நன்றாக சூடாக்கி பின்னர் ஆற வைத்து வெயிலில் காய வைத்து பின்னர் பொடி ஆக்கி எடுத்துக்கொண்டால் தான் அஸ்வகந்தாவின் பயன்கள் முழுமையாக கிடைக்கும்.
அஸ்வகந்தாவை வெண்ணீர், பால், நெய், தேன் போன்ற ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிடுவதால் முழு பலனை பெறலாம்.
அஸ்வகந்தா பொடி கால் டீஸ்பூன் அளவு (250–600 mg) அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான கம்பு சாம்பார் சாதம்