குட்டி குஷ்புவிற்கு டேட்டிங்க்கு அழைத்து தொல்லை கொடுக்கும் நடிகர்: திடீரென பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!
திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வாணிக்கு நடிகர் ஒருவர் டேட்டிக் அழைத்து தொல்லைக்கொடுத்து வருவதாக பேட்டி ஒன்றில் கூறிய விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.
ஹன்சிகா மோத்வாணி
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வாணி.
இவர் பார்ப்பதற்கு கொஞ்சம் குஷ்புவின் சாயல் இருப்பதால் எல்லோரும் இவரை குட்டி குஷ்பு என்று அழைக்கத் தொடங்கினார்.
இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிளை' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணியில் நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுடன் இணைந்து சில வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
பின்னாளில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவராக தெரிவுச் செய்யப்பட்டு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
கொஞ்ச காலம் சினிமா பக்கம் தலைக்காட்டாமல் இருந்த ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி சோஹேல் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
தொல்லைக் கொடுக்கும் நடிகர்
இந்நிலையில், சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், பிரபல நடிகர் ஒருவர் தொடர்ந்து தொல்லை செய்து வருவதாகவும், டேட்டிங் போகலாம் என்று கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் கூறிய தகவல் வைரலாகி வந்தது.
ஆனால் இந்த விடயத்தை தெரிந்துக் கொண்ட ஹன்சிகா தற்போது ஸ்கிரீன்ஷாட் எடுத்து டுவிட்டரில் ஷேர் செய்து, “நான் எந்த ஒரு பேட்டியிலும் இப்படி ஒரு கருத்தை சொல்லவில்லை. தயவுசெய்து கண்டதை எழுதுவதை நிறுத்துங்கள்” என ஆவேசமாக பேசியிருக்கிறார்.