தொழிலதிபரை திருமணம் செய்கிறாரா கீர்த்திசுரேஷ்? - தீயாய் பரவும் புகைப்படம்
சுரேஷ் சுரேஷ் தொழிலதிபருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தொழிலதிபரை திருமணம் செய்கிறாரா கீர்த்திசுரேஷ்?
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஃபர்ஹான் பின் லியாகத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் நண்பரான இவரை தான் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருகிறாரா, விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.