திருமணத்திற்கு பின்னர் எலும்பும் தோலுமாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹன்சிகா
திருமணம் முடித்துக் கொண்டு செட்டிலாகும் பிரபலங்களில் ஒருவரான நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து சினிமாவில் குட்டி குஷ்பூவாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வாணி.
இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் தமிழில் குறைவான திரைப்படங்கள் நடித்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார்.
இவர் தமிழில் பயணம் செய்த காலம் குறைவாக இருந்தாலும் தமிழிலிருக்கும் டாப் நடிகர்களுடன் எல்லாம் நடித்து விட்டார்.
இதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து தெலுங்கு பக்கம் சென்று விட்டார். இவரின் மார்க்கட் அதிகரிக்கும் பட்சத்தில் சம்பளமும் அதிகரித்துக் கொண்டே சென்று விட்டது. சமீபக் காலமாக இவர் தன்னுடைய உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இவரின் முயற்சிகளின் வெளிப்பாட்டை நிகழ்ச்சிகளில் ஹன்சிகா கலந்துக் கொள்ளும் போது பார்க்கலாம்.
திருமணத்திற்கு பின்னர் எலும்பும் தோலுமாக மாறிய பிரபலம்
இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு ஹன்சிகா சோஹேல் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவரின் திருமணம் குறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் எழுந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
திருமணத்தை படமாக்கி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு தான் நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “ திருமணத்திற்கு பிறகு தான் ஹன்சிகா எலும்பு தோலுமாக மாறிவிட்டார் ” என கவலை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த காலக்கட்டங்களில் தன்னுடைய உடல் எடையை குறைத்து தற்போது காணாமலே போய்விட்டார் என்றே கூற வேண்டும்.