சொந்த பாட்டி முதல் மாடல் அழகி வரை! 365 பெண்களுடன் டேட்டிங் செல்ல துடிக்கும் பிரபல நடிகர்
பிரபல தமிழ் நடிகரும், டான்சருமான சுந்தர் ராமு 365 பெண்களுடன் டேட்டிங் செல்வதை தன்னுடைய இலக்காக கொண்டு வாழ்ந்து வருகிறார்.
சுந்தர் ராமு திருமணமாகி விவாகரத்தானவர், 2015ம் ஆண்டு முதல் இதுவரையிலும் 335 பெண்களை டேட்டிங் செய்துள்ளார்.
இந்தியா, வியட்நாம், ஸ்பெயின், இலங்கை என பல நாடுகளில் உள்ள பெண்களுடன் டேட்டிங் செய்துள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தன்னுடைய நோக்கம் என கூறும் சுந்தர் ராமு, தன்னுடைய இலக்கை அடைய இன்னும் 30 பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டுமாம்.
பெண்களை மிகவும் கண்ணியமாக நடத்தும் குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்ததாகவும், பள்ளியில் கூட ஆண்- பெண் பாகுபாடு இல்லாமல் வளர்ந்ததாகவும் குறிப்படும் சுந்தர் ராமுவுக்கு, வெளி உலகில் நடக்கும் கொடுமைகள் கோபத்தை உண்டாக்கியதாக தெரிவிக்கிறார்.
மேலும் 2012ம் ஆண்டு நிர்பயாவுக்கு நடந்த கொடுமையால் பல நாட்கள் தூக்கமின்றி தவித்ததாகவும் தெரிவிக்கிறார்.
இதனையடுத்தே பெண்களுடன் டேட்டிங் செல்லும் பழக்கத்தை கையிலெடுத்ததாகவும் விவரித்துள்ளார்.
தன்னுடைய பாட்டியுடன் டேட்டிங் சென்றதே இதுவரையிலும் ரொமான்டிக்காக இருந்தாகவும், பாட்டியுடன் சேர்ந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.