கொத்துக் கொத்தாக முடி கொட்டுகிறதா? இந்த பூவையும், இலையையும் இப்படி பயன்படுத்திப் பாருங்க
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அது மட்டுமில்லாமல் ஆண், பெண் இருபாலாருக்கும் ஏற்படும் முடி உதிர்வுப் பிரச்சினைகளுக்கும், பொடுகுத் தொல்லைகளுக்கும் இருக்கும் அதற்கு சிறந்த தீர்வு தான் இந்த செம்பருத்தி பூவும், இலையும் உதவும்.
தலைமுடியை பாதுகாக்கும் செம்பருத்தி
வறண்ட தலைமுடிக்கும் முடி உதிர்தல் பிரச்சினைக்கும் இயற்கையான மருந்தாக பயன்படுகிறது செம்பருத்தி.
இது முடி உதிர்வைக் குறைக்கவும் தலைமுடியை பளபளப்பாகவும் மாற்றுகிறது. இந்த செம்பருத்திப் பூவைக்கொண்டு எண்ணெய் தயாரித்து முடிக்குப் பயன்படுத்திப் பாருங்கள் முடி பளப்பாகவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
அதற்கு முதலில் செம்பருத்தி பொடியையும், தேங்காய் எண்ணெய்யையும் ஒரே அளவில் கலந்தால் எண்ணெய்யாக மாறிவிடும்.
இந்த எண்ணெய்யை 10 நிமிடங்கள் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் வைத்து அடுத்த நாள் காலையில் தலையை கழுவலாம்.