ஆண்களே! உங்க தலைமுடி சொட்டையாகி விட்டதா? நீங்க இத பண்ணா போதுமாம்...!
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலைமூடி பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
ஆனால் பெண்கள் இது குறித்து கவனம் செலுத்தி தனக்குள் இருக்கும் பிரச்சினைகளை சரிச் செய்துக் கொள்வார்.
ஆண்கள் தங்களுக்கு அதிக வேலைப்பழு காரணமா தலைமுடி குறித்து கவனம் செய்யமாட்டார்கள். இதனால் காலப்போக்கில் தலைமுடி உதிர்வு தலை சொட்டையாகி விடுகிறது.
இந்த பிரச்சினை காலநிலை மட்டும் காரணமாக இருக்க முடியாது, வறண்ட சருமம் , போதியளவு போசாக்கு இன்மை, ஹாரமோன்ஸ் மாற்றம் போன்ற பிரச்சினைகளாவும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் தலைமுடி பிரச்சினைக்கு என்ன தீர்வு என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
ஆண்களின் தலைமுடி உதிர்க்கான காரணங்கள் தெரியுமா?
சூரிய கதிர் வீச்சி அதிகமாக இருக்கும் இடத்தில் அதிகமாக இருத்தல்.
தினமும் குளிப்பது.
சூடுதண்ணீரில் குளித்தல் மற்றும் தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி தலைமுடி உலர்த்துதல்.
ஹைப்போ தைராய்டிசம்
குளோரினேட்டட் தண்ணீரைப் பயன்படுத்துதல்
இரசாயன முடி பராமரிப்பு பொருட்கள்
கட்டுபடுத்தும் வழிமுறைகள்
1. தினமும் வாழைப்பழம் , தேன் மற்றும் தயிர் அதிகப்படியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தலைமுடி வறட்சி கட்டுபடுத்தப்படும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு ஆரோக்கித்தை ஈரப்பதனையும் தருகிறது.
இதனை தொடர்நது வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் கலந்து தலையில் அப்ளை செய்து சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் ஷாம்போ போட்டு கழுவ வேண்டும்.
2. தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் என்பவற்றை ஒன்றாக கலந்து, பேஸ்ட் போன்று கலந்து அந்த கலவையை கலந்து சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தலையில் ஊற வைத்து விட்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் தலைமுடிக்கு ஊட்டச்சத்து கிடைப்பதுடன் காலப்போக்கில் தலைமுடி உதிர்வும் குறைவடையும்.
3. ஒரு வெண்ணீர் கோப்பையில் ஜெலட்டின் ஒரு மேசைக்கரண்டி, அத்தியாவசிய எண்ணெய் 6 துளிகள், ஆப்பிள் சைடர் வினிகர் என்பவற்றை ஒன்றாக கலந்து தலைமுடிக்கு அப்ளை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலுக்கு புரத சத்துக் கிடைப்பதுடன் ஜெலட்டின் கோட் மற்றும் முடியின் இழைகளை ஈரப்பதமாக்குகிறது.