கொத்து கொத்தாக முடி உதிர்கின்றதா? ஒரே நாளில் அடர்த்தியாக மாற்றும் எண்ணெய்
இன்றைய இளைய தலைமுறையினர் அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது முடி உதிர்தல் ஆகும். ஆம் அழகுக்கு அழகு சேர்க்கும் கூந்தல் பிரச்சினையால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முடி உதிர்விற்கு காரணம் என்ன?
உங்களுக்கு தலைமுடியில் பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு சத்து குறைபாட்டால் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். சிலருக்கு மன அழுத்தத்தால் முடி உதிரும்.
பொடுகு, தலையில் அழுக்கு சேர்தல், பிசுபிசுப்பான முடி போன்ற காரணங்களும் முடி உதிர்விற்கு காரணமாக அமையும். மேலும் தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டாலும் முடி வளர்வது கடினமே.
இங்கு முடி அடர்த்தியாக வளர்வதற்கு கருஞ்சீரகம் எவ்வாறு பயன்படுகின்றது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் நம்முடைய முடியை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வும் குறைகிறது. இந்த எண்ணெய் மிதமான சூட்டில் தயார் செய்து தலையில் தேய்க்க வேண்டும். இரவில் தேய்த்து விடிந்ததும் தலைக்கு குளித்தால் முழுபலன் கிடைக்கும்.
கருஞ்சீரக எண்ணையை கடைகளில் வாங்கிக் கொண்டு, அதனுடன் தேங்காய் எண்ணெய், தேன் ஆகியவற்றை சேர்த்து, முடியின் வேர்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
வேர்கால்கள் மட்டுமின்றி தலையின் நுனி முடி வரை நன்கு தடவிக்கொள்ளவும். பின்பு தொடர்ந்து இளஞ்சூடுள்ள தண்ணீரில் துண்டை நனைத்து, நன்கு பிழிந்து அதை தலையில் சுற்றிக் கொள்ளுங்கள்.
இப்படி 20 நிமிடங்கள் அப்படியே அமர்ந்து, பின்பு தலையினை அலசிக்கொள்ளவும்... இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி அடர்த்தியாக வளர்வதை நன்கு கவனிக்கலாம்.