முகம் தங்கம் போல் மின்ன வேண்டுமா? செம்பருத்தி பூவே போதும்
இன்று பலருக்கும் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பெரும் தொல்லையாக இருக்கின்றது. அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து பல இரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கிறோம்.
ஆனால், இயற்கையிலேயே பல பொருட்கள் நம் அழகை பாதுகாப்பதற்கு உள்ளன. அவற்றில் ஒன்று செம்பருத்தி பூ. செம்பருத்தியைக் கொண்டு எவ்வாறு சருமத்தை பாதுகாக்கலாம் எனப் பார்ப்போம்...
முதலில் செம்பருத்திப் பூவை எடுத்து, வெயிலில் காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் கற்றாழை மற்றும் தேன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
இதை முகத்தில் தேய்ப்பதற்கு முன்னர் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நீராவியில் காட்ட வேண்டும். இதனால் சருமத்திலுள்ள அழுக்குகள் வெளியேறும்.
அதன் பின்னர் முகத்தை நன்றாக துடைத்துவிட்டு, இந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இதை உபயோகித்து ஒருநாள் வரையில் எந்த சவர்க்காரமும் பயன்படுத்தக் கூடாது. அப்பொழுதுதான் பலன் கூடுதலாக இருக்கும்.
இதை வாரத்துக்கு ஒரு நாள் செய்யலாம்.