தலைமுடிப்பிரச்சினை எதுவாக இருந்தாலும் ஒரே ஒரு சிறந்த தீர்வு
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி பிரச்சினைகளை வீட்டிலிருந்து தீர்ப்பதற்கு ஒரு எண்ணெய்யை தயாரித்து பராமரித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
எண்ணெய் தயாரிக்கும் முறை
ஒரு கடாயில் 2 லீட்டர் எண்ணெய் ஊற்றி நன்றாக காயவைத்து அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை, செம்பருத்தி இலை என்பவற்றை சேர்க்க வேண்டும்.
பின்னர் அடர்த்தியான முடிக்கு கரிசலாங்கண்ணி, வெங்காயம், நெல்லிக்காய் இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு சோற்றுக்கற்றாழை ஒரு கப் எடுத்து கழுவி அதனுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் இதனுடன் வெந்தயம்,கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொதிக்க விட்டு நிறம் மாறும் வரை காய்ச்சி எடுக்கவும். காய்ச்சி எடுத்த எண்ணெய்யை ஒரு நாள் அப்படி வைத்திருக்க வேண்டும்.
அடுத்த நாள் இதனை ஒரு போத்தலில் சேர்த்து 2 அல்லது 3 மாதங்களுக்கு பழுதாகாமல் பாவிக்கலாம். முடிக்கொட்டுதல், பொடுகு தொல்லை, போன்ற பிரச்சினைகளுக்கு இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |