முடி கொட்டாமல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டுமா? அப்போ 6 விதைகள் சாப்பிட்டால் போதும்!
ஒருவரின் அழகை பிரதிபலிப்பதில் முடிக்கு முக்கியப் பங்கு இருக்கின்றது. அதிலும் இந்த முடியால் பலருக்கு பல பிரச்சினைகள் எப்போதும் இருந்துக் கொண்டேதான் இருக்கும்.
முடி உதிர்தல், பொடுகு பிரச்சினை, நடிமுடித் தொல்லை என பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டேதான் இருக்கின்றோம். இவற்றைப் பராமரிப்பதற்காக பல வழிகளில் பலர் முயற்சிப்பார்கள்.
இயற்கையாகவும், பக்கவிளைவுகள் அல்லாத தீர்வுகளைதான் நாம் தேட வேண்டும். மேலும், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 6 விதைகளை உண்ணுவதன் மூலமும் இந்த முடிப்பிரச்சினைகளை சரி செய்யமுடியும்.
முடிக்கு 6 விதைகள் நாம் தினமும் உண்ணும் உணவானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, அது முடிகளுக்கு ஊட்டம் அளித்து அதன் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் உதவும்.
பல விதமான முடிப்பிரச்சினைகளுக்கு சில விதைகள் தீர்வாகும். விதைகளில் என்ன இருக்கின்றதென கேட்டால் விதைகளில் ஒலிக் அமிலம், புரதம், இரும்புச்சத்து, பயோட்டின், கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ, துத்தநாகம் போன்றவை அதிகம் இருக்கின்றன. முடிகளுக்கு ஏற்ற அந்த விதைகளாவன:
எள் விதைகள்
முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஊட்டச்சத்து. எல் விதைகளில் ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் அளவிற்கு நன்மைகள் உள்ளது.
கறுப்பு மற்றும் வெள்ளை எள் விதைகளில் தாதுக்கள், விட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் என அதிகம் உள்ளது. இதை நாளொன்று இரண்டு தேக்கரண்டி உண்பதால் முடி பிரகாசமாக இருக்கும்.
கருஞ்சீரக விதைகள்
கருஞ்சீரக விதைகள் தலைமுடிக்கு சிறந்த மருந்தாகும். இதை கலோஞ்சி விதை எனவும் அழைக்கப்படும்.
இந்த கருஞ்சீரக விதைகள் உங்கள் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, சிறந்த முடி வளர்ச்சிக்கு உதவும்.
மேலும், முடி உதிர்தலைக் குறைக்கும். இந்த விதை உங்கள் உச்சந்தலையில் தொற்று ஏற்படுவதையும் தடுக்கும்.
சூரியகாந்தி விதைகள்
சூரிய காந்தி விதைகள் உடலுக்கு மிகவும் சத்து வாய்ந்தது.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்களும் அவற்றில் இருப்பதால் இவை உங்கள் முடியைப் பாதுகாக்கும்.
இந்த சூரியகாந்தி விதைகள் நாளொன்றுக்கு சுமார் 30 கிராமுக்குள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெந்தய விதைகள்
வெந்தய விதைகள் முடி உதிர்வைக் குறைக்கும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வல்லமைக் கொண்டது.
இது முடி வளர்ச்சிக்கு ஒரு நல்ல உணவாகும். இது பொடுகுத் தொல்லையைத் தடுக்கும். மேலும், முடி ஆரோக்கியத்திற்கு உதவும் புரதம், நியாசின், அமினோ அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இது உடலுக்கு சிறந்த உணவாக உள்ளது.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் துத்தநாகம், செலினியம், தாமிரம், வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. இது முடி உதிர்வதைக் குறைக்கவும், உங்கள் முடியை பளபளப்பாகவும் உதவுகின்றன.
பூசணி விதையை ஒரு நாளைக்கு சுமார் 30 கிராம் வரை தான் பயன்படுத்த வேண்டும். ஆளி விதைகள் முடி உதிர்வைக் குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
ஆளி விதைகள்
ஆளி விதைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை வளமான மூலமாக இருப்பதால் அது முடியின் வேர் வரைக்கும் நன்மை அளிக்கும்.
ஆளி விதைகளை பொடியாக்கி தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.