அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர என்ன செய்யலாம்?
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வை நிறுத்தி அசுர வேகத்தில் முடி வளர வைக்கும் சிறந்த தீர்வினை கொடுக்கும் இந்த ஹேர் பெக்கை நீங்கள் செய்து பாருங்கள்.
முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி இலை
செம்பருத்தி இலையானது உடல் சூட்டைக் குறைத்து கொட்டிய இடத்தில் புதிய முடிகளை வளரச் செய்யும். மேலும், பொடுகு தொல்லையிலும் இருந்து விடுபட வைக்கும்.
- இந்த செம்பருத்தி இலையை வைத்து இந்த ஹேர் பெக் செய்து பயன்படுத்தி பாருங்கள் உங்கள் முடி வளர்ச்சி வித்தியாசத்தை உணருவீர்கள்.
- இதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவில் செம்பருத்தி பூவை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- தற்போது அரைத்த செம்பருத்தி இலை சாற்றினை ஒரு கிண்ணத்தில் பிழிந்துக் கொள்ள வேண்டும். பிறகு 4 கரண்டி நெல்லிக்காய் பவுடரை எடுத்து பிழிந்து எடுத்துக் கொண்ட செம்பருத்தி சாற்றில் கலந்து 5நிமிடம் கலக்கிக் கொள்ள வேண்டும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு 2 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து 5 நிமிடம் கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் முடிவளர்ச்சிக்கு சூப்பர் ஹேர் பெர் தயார்.
இந்த ஹேர் பேக் தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இதேபோல வாரம் 2 முறை என 3 மாதம் வரை செய்தால் போதும் முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக வளரும்.