வெயில் காலத்தில் அதிகம் முடி கொட்டுகிறதா? உங்கள் பிரச்சினைகளுக்கான சூப்பர் தீர்வு தான் இது!
இந்த வெயில் காலத்தில் தலையில் இருந்து கால் வரைக்கும் அனைவரும் பல பிரச்சினைகள் வந்துக் கொண்டு தான் இருக்கும். அதிலும் ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினாலும் கூடவே இந்த வெயிலாலும் முடி உதிர்வு அதிகம் ஏற்படுகின்றது.
தலைமுடிக்கு அதிகம் அவசியமானது ஊட்டச்சத்துக்கள் அந்த ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் முடிக்கும் உடலுக்கும் சிறந்த ஆரோக்கியம் கிடைக்கும்.
சேர்க்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள்
1. முடிக்கு சிறந்த ஊட்டச்சத்து தான் இந்த பயோட்டின் என்ற வைட்டமின் பி. இநத வைட்டமின் உங்கள் உடலுக்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் தான் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க முடியாமல் உச்சந்தலைக்கு குறைந்த ஒக்சிஜன் கிடைக்கிறது இதனால் தான் உச்சந்தலைக்கு ஏற்ற ஊட்டச்சத்து இல்லாமல் அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது.
2. இரும்புச் சத்தானது உடலுக்கு மாத்திரம் அல்ல தலைமுடிக்கும் அதிக தேவைப்படுவதாகும். இந்த இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ள உணவை தினமும் எடுத்துக் கொண்டால் முடி பிரச்சினைளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். இதற்கு நீங்கள் பசலைக் கீரையையும் எடுத்துக் கொள்ளலாம்.
3. வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகளை உண்ணுவதால் முடி உதிர்வு ஏற்படும். அத்தியாசியமான கூறுகளில் ஏராளமாக உள்ள உணவை உண்பதன் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து வைட்டமின் ஏயும் கிடைக்கும்.
4. வைட்டமின் சி யானது வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும். இது முடி இழைகளை ஆக்ஸிஜனேற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
5. வைட்டமின் டீ குறைப்பாட்டால் அதிக முடி உதிர்வுகள் ஏற்படலாம். மேலும் இந்த வைட்டமின் டீ தான் மயிர்க்கால்களை உருவாக்க அதிகம் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய முடியை உருவாக்கவும் தூண்டுகிறது.
6. வைட்டமின் ஈயானது முடிக்கு வளர்ச்சியையும் வலிமையையும் கொடுக்கிறது. அதனால் இந்த வைட்டமின் ஈ சார்ந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் முடி ஆரொக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளரும்