இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை பொடி.... செய்வது எப்படி?
கருவேப்பில்லை இலைகள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்குமாம்.
மேலும், தினமும் சாதத்தில் சேர்த்து கொள்ளும் வகையில் பொடியாக தயாரித்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கப்,
மைசூர் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்,
புளி - சிறிது,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
சிவப்பு மிளகாய் - 7,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
முதலில், கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
அடுத்து, நன்றாக வதங்கியதும் அதில் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதை ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பொடியை சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வருவதால் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்.