சக்கரை நோய் இருந்தால் முடி கொட்டுமா? உங்கள் குழப்பங்களுக்கான பதில் இதோ
மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. ஆனால் அதையும் தாண்டி சில நோய்கள் ஏற்படுவதற்கு அறிகுறியாகவும் இந்த இந்த முடி உதிர்வு பிரச்சினை ஏற்படும்.
சக்கரை நோயாளிகளிக்கு முடி உதிர்வு பிரச்சினை
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும். ஆனால் முடி உதிர்வும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுமா என்ற எண்ணம் இருக்கும். உங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ,
1. உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது முடி வளர்ச்சியும் அதிகரிக்கும் ஆனால் இரத்த நாளங்கள் சேதப்படும் போது இரத்த ஓட்டமும் குறையும் இதனால் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனும் முடியின் வேர்களில் இழக்க நேரிடும்.
2. இன்சுலின் அளவும் ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் இருந்தால் முடி உதிர்வின் வளர்ச்சிக்கு தூண்டும் ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்பட்டால் முடி உதிர்வு ஏற்படும்.
3. சக்கரை நோயாளிகளுக்கு உடலில் இருக்கும் அழற்சியால் முடியின் வேர்கள் சேதப்படுவதுடன் முடி உதிர்தலும் ஏற்படும்.
4. சக்கரை நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் அது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆகவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் முடி உதிர்வு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
5. இந்த சக்கரை நோயாளிகளுக்கு அதிக மன அழுத்தம் இருக்கும் நேரங்களிலும் முடி உதிர்வு ஏற்படும். இது முடி பிரச்சினைகளை மட்டுமல்ல அனைத்து உடல் சம்பந்தப்பட்ட ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |