முடி அதிகமா கொட்டுதேனு கவலை வேண்டாம்: இந்த மூணு பொருட்கள் மட்டும் போதும்!
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வினை இங்கே பார்க்கலாம்.
இந்த முடிப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பண்டைய காலத்து மருத்துவ தீர்வுகளைப் பயன்படுத்தலாம்.
வெந்தயம்
முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு இந்த வெந்தயம் சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த வெந்தயத்தில் அதிக புரதமும் நிகோடினிக் அமிலம் அதிகம் நிறைந்திருக்கிறது. இது உங்கள் முடிக்கு அதிக ஆரோக்கியத்தை வழங்கி முடி வளர ஊக்கப்படுத்துகிறது அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது வெந்தய விதைகளை மா பதத்திற்கு அரைத்து உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறும் உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கும் தலைமுடி பிரச்சினைகளுக்கும் அதிகம் உதவுகிறது. எலுமிச்சை சாற்றையும் தேங்காய் எண்ணெய்யும் சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து தலைமுடியில் தடவி அரை மணி நேரத்திற்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலசினால் முடி உதிர்வு பிரச்சினை மட்டுமல்ல பொடுகு பிரச்சினைக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்.
நெல்லிக்காய்
முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு காலம் காலமாக பயன்படுத்தப்படுவது இந்த நெல்லிக்காய். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி முடி வேர்களை வலுப்படுத்தி முடி வளரச்சியை அதிகரிக்கிறது. இந்தக் நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் முடிப்பிரச்சினைகள் தீரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள்! JOIN NOW |