எழு, எட்டு வயதில் குழந்தைகள் பருவமடைவதற்கான காரணம் என்ன? மொபைல் போன் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்!
பெண்கள் பருவமடைவது இயல்பான ஒரு விடயம் தான். அதற்கென ஒரு வயது இருக்கிறது. இது இயல்பான ஒரு விடயம் தான். ஆனால் தற்போதைய குழந்தைகள் சில ஏழு, எட்டு வயதில் பருவமடைகிறார்கள்.
மாதவிடாய் என்றாலே என்ன என்று தெரியாத குழந்தைகளும் இன்று பருவமடைதல் அதிகரித்து வருகின்றது. இந்தக் காலக்கட்டத்தில் 7 இலிருந்து 10 வரையிலான வயதுடைய குழந்தைகள் இன்று பருவமடைந்து மாதவிடாயை சந்தித்து வருகிறார்கள். விளையாட வேண்டிய வயதில் இந்த வலியை அனுபவிக்க நேர்ந்துவிடுகிறது.
குழந்தைகள் பருவமடைவதற்கான காரணம்
- உடல் பருமன்
- அதிக அசைவ உணவுகளின் பயன்பாடு
- சில மரபணு காரணிகள்
- மன அழுத்தம்
- குடும்ப சண்டைகள்
- சோயாபீன்களை அதிகம் உட்கொள்வது
- உணவில் உள்ள ரசாயனம், பூச்சிக்கொல்லி
- வளர்ச்சிக்கேற்ப மாறுபடும் உணவு முறை
போன்ற காரணங்களால் கூட குழந்தைகள் பருவமடையலாம் என்று ஆய்வு சொல்கிறது.
மொபைல் போனால் பருவமடையலாம்
மாதவிடாயை தூண்டுவதற்கு தேவையான ஹார்மோன்களை வெளியிட மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் சுரப்பிகளின் சமிக்ஞைகள் தான் மிகவும் அவசியம் குழந்தைகள் வளரும் போது இந்த சுரப்பி மூலமாக ஹார்மோன் சுரக்கிறது.
இதன் விளைவாக பெண் குழந்தைகளின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு, மாதவிடாய் ஏற்படுகிறது.
அதனால் வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது, ஆபாச புகைப்படங்களையும், காணொளிகளை பார்ப்பதாலும் அவர்களின் ஹார்மோன்களை தூண்டி குழந்தைகளை பருவமடைய வைக்கிறது.