செலவே இல்லாமல் தலைமுடி உதிர்வுக்கு தீர்வு.. இந்த எண்ணெய் செய்து போடுங்க
பொதுவாக பெண்கள் தலைமுடி உதிர்வு, பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதனை ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் மற்றும் உரிய சிகிச்சை முறைகளால் கட்டுக்குள் வைக்கலாம்.
இவற்றை தவிர்த்து வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியங்கள் செய்யலாம்.
அந்தவகையில் தலைமுடி பிரச்சினைகளை எளியமுறையில் தீர்க்கும் மூலிகை எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேம்பாளம் பட்டை 10 -15 கிராம்
- விளக்கு எண்ணெய் 100 ml
- தேங்காய் எண்ணெய் 100 ml
- பச்சைக் கற்பூரத்தூள் 1/2 ஸ்பூன்
செய்முறை
ஒரு சிறிய பவுலில் வேம்பாளம் பட்டையை சிறிய சிறிய துண்டுகளாக உடைத்துப் போட்டு அதில் பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும்.
பின்பு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயையும், விளக்கு எண்ணெயையும் ஒன்றாக ஊற்றி அதனுடன் கலந்து ஒரு மூடி போட்டு ஒரு நாள் அப்படியே ஊற வைத்து விடுங்கள்.
மறுநாள் எடுத்துப் பார்த்தால் அந்த எண்ணெய் நன்றாக சிவப்பு நிறமாக மாறியிருக்கும். அதனை அடுத்து இரண்டு நாள் இந்த எண்ணெயை நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். இதனை உங்களுடைய வீட்டில் வெயில் இல்லை என்றால் டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்யலாம்.
அடுத்தபடியாக அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விட்டு அந்த தண்ணீருக்கு மேலே இந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து, பத்து நிமிடம் போல சூடு செய்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
எண்ணெய் நன்றாக சூடானால் மட்டும் போதும், பிறகு இந்த எண்ணெயை நன்றாக ஆறவிட்டு வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாவணை முறை
எண்ணெயை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு ஸ்கேல்பில் நன்றாக படும்படி வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இதன் பின்பு 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் இந்த எண்ணெயை தலையில் அப்படியே விட்டு விடுங்கள்.
பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைமுடியை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |