மொபைல் போன் பாவனையாளார்களுக்கு எச்சரிக்கை! தானாக டவுன்லோட் ஆகும் ஆபத்தான apps: எப்படி கண்டுப்பிடிப்பது தெரியுமா?
நாம் உபயோகிக்கும் ஒரு தொலைப்பேசியில் மிக முக்கியமானது பாதுகாப்புதான். இந்த பாதுகாப்பை நமது கட்டுக்குள் வைத்திருப்பது எமது கையில் தான் இருக்க வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போனின் உபயோகம் அதிகரிக்கின்ற அதேநேரம் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பாவனையால் பல நன்மைகள் இருந்தாலும் பல தீய செயல்களையும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் நாம் பயன்படுத்தும் போனில் ஒளிந்திருக்கும் பல விடயங்கள் பற்றி இப்போது தெரிந்துக் கொள்ளலாம்.
ஸ்மார்ட் போனில் மறைந்திருக்கும் ஹிட்டன் ஆப்ஸ்
உங்கள் ஸ்மார்ட் போனில் செட்டிங் பகுதிக்கு சென்று அதில், ஆப்ஸ் அண்ட் நோட்டிபிகேஷன் (Apps and Notifications) பகுதியில் நீங்கள் உபயோகிக்கும் செயலிகளின் முழுமையான பட்டியல் இருக்கும்.
இப்போது, See All Apps என்பதை தேர்வு செய்து Installed Apps, Disabled Apps, Hidden Apps என அனைத்து விருப்பங்களும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்போது, Disable apps என்பதற்குள் சென்று இதில், உங்கள் மொபைலில் எந்தெந்த ஆப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
அவ்வாறு நீங்கள் Installed செய்யப்படாத செயலிகள் ஏதாவது இருந்தால், அதை உடனே டெலிட் செய்து கொள்ளவும்.
எப்படி கண்டுபிடிப்பது?
உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் சென்று ஆப்ஸ்க்குள் செல்லவும். இங்கே Special App Access கிடைக்கும். அதை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு All Files Access கிடைக்கும். அதை கிளிக் செய்து. இப்போது, உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகளை பற்றிய தகவலைப் பெறலாம்.
இங்கே நீங்கள் மறைக்கப்பட்ட செயலிகளை தெளிவாக காணக்கூடியதாக இருக்கும்.