62 வயதுப் பாட்டிக்கு கணவனான 25 வயது இளைஞன்: பாட்டிக்கு எத்தனை குழந்தைகள், பேரக்குழந்தைகள் தெரியுமா?
காதலுக்கு கண் இல்லை, சாதி, மதம், இனம் இல்லை என சொல்வார்கள். அப்படியே வயதையும் தாண்டி காதல் செய்வதை தற்போது வைரலாக்கி வருகின்றன.
இந்நிலையில், வயதைக் கடந்து காதல் திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகள் தொடர்பிலான செய்தி ஒன்று பரவி வருகின்றது.
காதல் திருமணம்
62 வயதான செரில் 25 வயதான குரான் மெக்கெய்ன் என்ற இளைஞன் திருமணம் செய்துக் கொண்டு ஏழு குழந்தைகளைப் பெற்று எட்டாவது குழந்தைக்காக காத்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த பாட்டிக்கு ஏற்கனவே 17 பேரக்குழந்தைகளும் எழு குழந்தைகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பாட்டி தனக்கு பிறக்க இருக்கும் எட்டாவது குழந்தை பற்றிப் பேசினார். அதில் அவர் பேசியதாவது,
"என் வயதின் காரணமாக, என்னால் குழந்தையைப் பராமரிக்க முடியாது என்கிறார்கள். அதனால் என்ன? இப்போதும் நான் போதிய ஆற்றலைப் பெற்றிருக்கிறேன்.
நான் அதை ஒரு விஷயமாகப் பார்க்கவில்லை. என்னாலேயே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது, ஆனால் வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஏற்கனவே மூன்று முறை வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுள்ளோம்" என்று அவர் கூறினார்.
இந்த தம்பதிகள் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர்கள். டிக்டாக்கில் 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் இவர்களை பின்தொடர்கின்றனர்.