உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் இஞ்சி டீ
இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், உடற் பருமன்தான்.
உடற்பருமன் பிரச்சினையானது உடல் மற்றும் மனரீதியாக ஒருவருக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எடை இழப்புக்கு இஞ்சி மற்றும் சுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
சரி இனி உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும் இஞ்சி மற்றும் சுக்கு டீ எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - Dr.Axe
இஞ்சி டீ செய்ய தேவையான பொருட்கள்
இஞ்சி - 2 அங்குலம்
தேன் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
தண்ணீர் - 250 மில்லி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
அதன்பின்னர் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
துருவிய இஞ்சியை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
இறுதியாக இதனை வடிகட்டி மிதமான சூட்டில் தேன் கலந்து குடிக்கலாம்.
image - traditionally modern food
சுக்கு டீ செய்ய தேவையான பொருட்கள்
சுக்கு - 1 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
தண்ணீர் - 250 மில்லி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் சுக்கு நேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிட வேண்டும்.
விரும்பும் பட்சத்தில் இறுதியாக தேன் சேர்த்து குடிக்கலாம்.