காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடிங்க: அதிசயத்தை கண்கூடாக அவதானிப்பீர்கள்
காலையில் எழுந்ததும் சிறிதளவு இஞ்சி சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. ஆம் இஞ்சி நமது மெட்டா பாலிசத்தை அதிகரித்து ஆற்றலை வழங்குகிறது.
எனவே காலை உணவு எனர்ஜிட்டிக் ஆக இருந்தால் உங்க செரிமானம் நன்றாக நடக்கும். இப்படி இன்னும் என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- நமது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக டயாபெட்டீஸ் நோயாளிகள் காலையில் இஞ்சி எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வருகிறது.
- இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச் சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இஞ்சி டீ இஞ்சி சாறு, இஞ்சி மிட்டாய், இஞ்சி சோடா, இஞ்சி துவையல் என்ற எளிதாக எதிலையும் சேர்த்து நம்மால் சாப்பிட முடியும்.
- காலையில் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிடுவதால் பசியுணர்வு அதிகரிக்கிறது, தலைவலி குணமாகிறது, சளித்தொல்லை சரியாகும் என இவ்வாறு பல காரணங்கள் இருக்கின்றது.
- காலையில் எழுந்ததும் டீ அருந்தும் பழக்கத்தை கொண்டிருக்கும் நீங்கள், அதில் சிறு துண்டு இஞ்சியை தட்டிப்போட்டு குடித்தால், சீரண சக்தியை அதிகரிக்கும்.
- இந்த சூடான இஞ்சி டீ உங்க குளிர் காலத்தை இதமாக்க கூடியது. இது உங்க தொண்டைக்கு இதமாக இருப்பதோடு உங்க வயிற்று பிரச்சனைகளை அமைதியாக்குகிறது.
- இந்த இஞ்சி டீயை உங்க வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம். தண்ணீரில் டீ த்தூள் மற்றும் இஞ்சி துண்டை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
- நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க நினைத்தால் இஞ்சி ஜாம், பிரட் மற்றும் பட்டர் என்று சாப்பிடுங்கள். மற்ற பழங்களால் தயாரிக்கப்பட்ட ஜாம்களில் மிக அதிக அளவில் வெள்ளை சர்க்கரை சேர்க்கப்படுகிறது.
இஞ்சி சிரப் எவ்வாறு தயாரிக்கலாம்?
தோலுரித்த இஞ்சி துருவல் சிறிதளவு, 1 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர் இவற்றினை தண்ணீரில் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து சிறிதளவு வற்றியதும் வடிகட்டி அந்த இஞ்சி சாறில் தேன் அல்லது சர்க்கரை கலந்து பயன்படுத்துங்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.