குண்டாக இருப்பதற்கும், தூக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இனி இந்த தவறை செய்யாதீங்க
பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது உடற்பருமன் தான்.
எவ்வளவு தான் முயற்சி செய்தும் இந்த உடல் எடையைக் குறைக்க முடியவில்லையே என்ற கவலையும் மனதுக்கு பிடித்த இறுக்கமான ஆடைகளை அணிய முடியவில்லையே என்ற ஏக்கமும் மனதை வாட்டும்.
குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்சினை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், பெண்களின் உடல் எடை பிரச்சினையில் நித்திரைக்கு பெரிய பங்குண்டு.
சரியாக உறங்காத பெண்கள் முறையாக உறங்கும் பெண்களை விட 300 கலோரிகள் அதிக உணவு உட்கொள்கிறார்களாம். ஏனென்றால் ஆழ்ந்த உறக்கமானது, பசியை தூண்டும் ஹார்மோன் செயல்பாட்டை சீராக்குகிறது.
தூங்கும்போது கவலை, மன அழுத்தம் இரண்டையும் விரட்டி விடலாம். ஏனென்றால் கவலையும் மன அழுத்தமும் தொப்பை வர முக்கிய காரணம்.
சிறந்த உறக்கம் அடுத்த நாளுக்கு தேவையான ஆற்றலை பெற்றுத் தருகிறது.
தூக்க நேரம் கூடினாலோ குறைந்தாலோ மற்றவர்களை விட பருமனாகவும் எடை போடவும் வாய்ப்புக்கள் அதிகம்.