இரவில் தண்ணீர் பருகலாமா?
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் முக்கியம். ஆனால், அந்த தண்ணீரையும் இரவு நேரங்களில் பருகலாமா? என்ற சந்தேகம் பலருக்கு எழும்.
உண்மையில் இரவில் தண்ணீர் குடிப்பது நல்ல நித்திரைக்கு வழி வகுப்பதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், இது பெரும்பாலும் தூக்கத்தை பாதிப்பதாக கூறுகின்றனர்.
image - Life and Trendz
நிபுணர்கள் கூறுவது...
இரவு உறங்கச் செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க உதவும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அது மன நிலையை எதிர்மறையாக பாதிக்கும்.
இருப்பினும் உறங்கச் செல்வதற்கு முன்னர் தண்ணீர் பருகுவது என்பது உறக்கத்தில் தொந்தரவை ஏற்படுத்தும்.
அதுமாத்திரமின்றி இது சிறுநீர் பையில் அதிகளவான சிறுநீரை தக்கவைத்துக்கொள்ள நேரிடும்.
image - Sleep foundation
இரவில் ஏன் தண்ணீர் பருகக்கூடாது?
அடிக்கடி சிறுநீர் கழிக்க எழும்ப வேண்டியிருக்கும். அதுமாத்திரமின்றி உறங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது தூக்க சுழற்சியை சீர்குலைக்கும்.
இரவில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க பகல் வேளைகளில் நன்றாக நீர் அருந்த வேண்டும். அதுமாத்திரமில்லாமல் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்தால், சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக காணப்படும்.
ஆனால், எப்பொழுதும் சிறுநீர் வெண்மையாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ இருக்கக்கூடாது.
image - Medical news today