இஞ்சி டீ நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா? பக்கவிளைவுகளை தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இஞ்சியை நாம் எடுத்துக்கொண்டால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதையும் இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதையும் இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இஞ்சி
நம் வீட்டு சமையல் அறையில் முக்கியமாக இடம் பெற்றுள்ள ஒரு பொருள் என்றால் அது இஞ்சி ஆக தான் இருக்க வேண்டும்.
அதன் மருத்துவ பலன்கள் எண்ணற்றவை. அதை அறிந்த நம் முன்னோர்கள் அதை கண்டிப்பாக உணவு பட்டியலில் சேர்த்துள்ளனர்.
பொதுவாக இஞ்சி வாசனைக்காகவும், காரத்திற்காக பயன்படுத்துவது என்றாலும் அதன் மருத்துவ பலன் மிக அதிகம் தான்.
இரும்புச் சத்தை தாறுமாறாக அதிகரிக்கும் ஒரே ஒரு கருப்பு உணவு! எப்படி சாப்பிடலாம்?
பெயர் காரணம்:
இஞ்சி என்னும் பெயரே இஞ்சுதல் என்ற சொல்லின் திரிபு தான். இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் என்று பொருள். இஞ்சி ஒரு கிழங்கு வகையாக இருந்து நீரை உறிஞ்சுவதால் இப்பெயர் பெற்றது.
சித்தர் பாடல்களில்:
“காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே!”
சித்த மருத்துவத்தில் இஞ்சிக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு என்பதை பல சித்தர்களின் பாடல் வழியாக அறியலாம்.
இஞ்சியின் காரத்தன்மை பித்தத்தை கண்டிக்கும் வல்லமை கொண்டது. பசியை தூண்டும், உமிழ் நீரை அதிக சுரக்க செய்வதால் செரிமானம் சிறப்பாக நடை பெற செய்கிறது.
நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் என்ன? கணவர் ஹேம்நாத் வெளியிட்ட பரபரப்பு தகவல்
தொப்பையை குறைக்க உதவும்
இஞ்சி சாற்றை பாலுடன் கலந்து உண்டால் அனைத்து விதமான வயிறு பிரச்சனைகளையும் சரி செய்யும். மேலும் உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு இஞ்சியும் தேனும் ஒரு வர பிரசாதம்.
இஞ்சி சாற்றை வெண்ணீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் காலையில் பருகினால் நீங்கள் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு
உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்றாலே அனைத்து நோய்களும் உடலில் வந்து நிரந்தரமாக வந்துவிடும்.
அதன் தொடர்ச்சியாக மூலம், கண் பார்வை கோளாறு போன்ற கொடிய நோய்களும் வந்துவிடும். உணவில் ஏதாவது ஒரு வகையில் இஞ்சியை சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பிக்பாஸ் காதலர்கள்! ராஜுவுடன் பிரியங்கா மாஸ் எண்ட்ரி
பசி மற்றும் அஜிரணம் கோளாறு
இஞ்சியுடன் புதினா சேர்த்து துவையல் செய்து உண்டால் அஜிரணம் கோளாறு சரியாகி விடும் மற்றும் சுறுசுறுப்பாக என்றும் இளமையோடு வாழலாம்.
உணவில் எந்த வகையில் இஞ்சியை சேர்த்து கொண்டாலும் அது பசியை தூண்டி விட தான் செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
இஞ்சி சாறும் தேனும் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நாள் முழுவதும் உற்சாகத்தோடு வாழலாம்.
பாம்பு கடித்த உடனே என்ன செய்ய வேண்டும்? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்
ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாக
இஞ்சி, எலுமிச்சை, வெங்காய ம் ஆகியவற்றின் சாற்றை எடுத்து அரை அவுன்ஸ் ஒரு வேலை எடுத்து கொண்டால் ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
நீரழிவு நோய் குறைய உதவும்
இஞ்சி சாறும் வெங்காய சாறும் தினம் காலை வெறும் வயிற்றில் உண்டு வர நீரழிவு நோய் படிப்படியாக குறையும்.
வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்
இஞ்சி டீ அதிகமாக பருகினால் பக்கவிளைவுகள் என்ன?
- இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் நமது செரிமான அமைப்பு பாதித்து வாய் எரிச்சல், வயிற்றுப்போக்கு, ஒமட்டல் என பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
- இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதனால் நமது உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அசிடிட்டியை ஏற்படுத்துகிறது.
- சர்க்கரை நோய் இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக் கூடாது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நோய் ஏற்படுத்துகிறது.
- உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை ஏற்படுத்துகிறது.
- இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் அமைதியற்ற நிலை, தூக்கமின்மை ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் அதிகமாகி உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அறுவைசிகிச்சை செய்யும் முன்பு இஞ்சி டீயை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மாரடைப்பில் இருந்து தப்பிக்க வைக்கும் உணவுகள்! இனி இளம் வயது மரணமில்லை
- ஏனென்றால் மயக்கத்திற்காக கொடுக்கப்படும் மருந்து இஞ்சி டீ-உடன் எதிர் செயலாற்றும். எனவே, அறுவைசிகிச்சை செய்த இடத்தில் புண், இரத்தக்கசிவுப் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிப்பதனால் பித்த நீர் அதிகமாக சுரந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்கவும்.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு இஞ்சி டீ வாந்தியை ஏற்படுத்தும்.
- சில சமயம் கர்ப்பிணிப் பெண்கள் குடிப்பதால் அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
- அளவிற்கு அதிகமாக இஞ்சி டீயை குடிப்பதனால் இரப்பைப் பிரச்சனை ஏற்படும். எனவே அளவாக குடிப்பது நல்லது.
வெயில் உங்களை சுட்டெரிக்குதா? உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள புதினா ஜூஸை இப்படி எடுத்துகோங்க!
இஞ்சியை பயன்படுத்தும் முன்பு சில கவனிக்க வேண்டிய குறிப்புகள்:
இஞ்சியை நன்கு இடித்து சாறெடுத்து 15 நிமிடங்கள் ஒரு டம்ளரில் வைத்திருக்கவும்.
அதன் கசடுகளை விட்டுவிட்டு தெளிவான சாறை மட்டும் எடுத்து குளிர்சாதன பெட்டியில் 5-6 நாட்கள்வரை வைத்திருக்கவும்.
2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இஞ்சி கொடுக்கப்படக்கூடாது.
பொதுவாக, இளைஞர்கள் 4 கிராம்களுக்கு மேல் ஒரு நாளில் இஞ்சியை எடுத்துக்கொள்ளுதல் கூடாது. (சமையலில் சேர்க்கப்படுவதையும் சேர்த்து)
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் வெந்தயம்! இப்படி எடுத்து கொண்டால் போதும்
கர்ப்பிணி பெண்கள் தினமும் 1 கிராமிற்கு மேல் இஞ்சி எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
உலர்ந்த அல்லது பச்சையான இஞ்சியை கொண்டு இஞ்சி டீ செய்து ஒருநாளைக்கு 2 வேளைகள் குடித்து வரலாம்.
கடுமையான எரிச்சலைக் குறைப்பதற்காக பாதிக்கப்பட்ட இடத்தில் இஞ்சி எண்ணெயை ஒருநாளுக்கு சில முறைகள் மசாஜ் செய்யலாம்.
மற்ற வடிவத்தில் எடுத்துக்கொள்வதைவிட இஞ்சி மாத்திரைகள் நல்ல பலன் தரக்கூடியதாக உள்ளன. மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னர் இஞ்சி மாத்திரைகளை உட்கொள்வது பக்க விளைவுகளை தவிர்க்க உதவும்.
கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கணுமா? இவற்றை செய்தாலே போதும்
வெறும் வயிற்றில் இஞ்சி
காலையில் வெறும் வயிற்றில், கட்டை விரலின் நகம் அளவிற்கு, தோல் சீவிய இஞ்சியை, சிறிது தேன் சேர்த்து சாப்பிடலாம்.
இஞ்சி நல்லது என்பதற்காக, நிறைய சாப்பிட வேண்டாம். தினமும் காலையில் சிறிய துண்டு சாப்பிட்டால், படிப்படியாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
ரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க வேண்டுமா?