நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் என்ன? கணவர் ஹேம்நாத் வெளியிட்ட பரபரப்பு தகவல்
மறைந்த நடிகர் சித்ராவின் மரணம் குறித்து அவரது கணவர் ஹேம்நாத் கூறிய உண்மை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா, ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மனதிலும் இடம்பிடித்திருந்தார்.
அப்படி இருக்கும் சூழ்நிலையில், திடீரென கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோட்டல் அறை ஒன்றில், VJ சித்ரா மரணம் அடைந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
மரணத்தில் மர்மம்
சித்ராவின் மரணத்திற்கு முன்பாக ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது. ஆனால், அவரது மரணத்திற்கு பின்னர் தான், ஹேம்நாத்துடன் ஏற்கெனவே திருமணம் நடந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், சித்ராவின் மரணத்தில் சந்தேகமும் அதிகம் எழுந்தது. இது தொடர்பாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
சித்ரா அப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக காரணம் என்ன?, அவரது மரணத்திற்கு பின் யாராவது உள்ளார்களா என்ற பல கேள்விகள், அவரது ரசிகர்கள் மத்தியில் இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பிக்பாஸ் காதலர்கள்! ராஜுவுடன் பிரியங்கா மாஸ் எண்ட்ரி
ஹேம்நாத் வெளியிட்ட பரபரப்பு தகவல்
இந்நிலையில், கணவர் ஹேம்நாத் தற்போது வெளியிட்டுள்ள தகவல் ஒன்று, கடும் பரபரப்பை கிளப்பி உள்ளது. சித்ராவின் மரணத்தில் சில மாஃபியா கும்பலுக்கு தொடர்பு உள்ளது என்றும், அவர்களால் தற்போது தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக ஹேம்நாத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனது வீட்டில் தங்காமல் பாதுகாப்புக்கு வேண்டி வேறொரு இடத்திலும் ஹேம்நாத் தங்கியுள்ளார். மேலும், சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை, நான் உயிரோடு தான் இருப்பேன் என்றும், உண்மை தெரியும் வரை போராடுவேன் என்றும் ஹேம்நாத் தெரிவித்துள்ளார்.
என்னுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், சித்ரா தன்னிடம் கடைசியாக சொன்ன விஷயங்களை வெளியே சொல்லுவேன் என்றும் ஹேம்நாத் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, ஹேம்நாத் இப்படி தெரிவித்துள்ளதை ஏன் ஆரம்பத்திலேயே அவர் குறிப்பிடவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதலில் ஹேம்நாத் மீது சந்தேகம் எழுந்திருந்த நிலையில், தற்போது வேறொரு கும்பலுக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக ஹேம்நாத் தெரிவித்துள்ள விஷயம், பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது.
பாம்பு கடித்த உடனே என்ன செய்ய வேண்டும்? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்