இரும்புச் சத்தை தாறுமாறாக அதிகரிக்கும் ஒரே ஒரு கருப்பு உணவு! எப்படி சாப்பிடலாம்?
கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - கால் கிலோ
அரிசி - ஒரு கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் என்ன? கணவர் ஹேம்நாத் வெளியிட்ட பரபரப்பு தகவல்
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை 3 மணிநேரம் நன்றாக ஊற வைத்து நைசாக அரைத்துகொள்ளவும்.
தோல் நீக்காத கருப்பு உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறியதும் அதனுடன் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து கலந்து கொள்ளவும். அதிகத் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
அரைத்த மாவில் கறிவேப்பிலை, கொத்துமல்லி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையவும்.
மாவைச் சிறிது எடுத்து, அடையாகத் தட்டி சூடான தோசைக் கல்லில் போடவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பிக்பாஸ் காதலர்கள்! ராஜுவுடன் பிரியங்கா மாஸ் எண்ட்ரி