பாம்பு கடித்த உடனே என்ன செய்ய வேண்டும்? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்
பாம்புக் கடியைப் பொறுத்தவரை பல தவறான மூட நம்பிக்கைகள் மக்களிடம் இருக்கின்றன. பாம்பு கடித்த இடத்தை, வாயால் கடித்து, விஷத்தை உறிஞ்சி எடுத்துக் காறித்துப்புவது, பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது, கீறிவிடுவது போன்றவை எல்லாம் தவறான முதலுதவிகள்.
பாம்பு கடிக்கு முதலுதவி என்ன?
பாம்பு கடித்தால், நடக்கவோ ஓடவோ விடாமல் அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனெனில், ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவும்.
பாம்பு கடித்த இடத்திலிருந்து, மேலே 15 செ.மீ உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதேனும் ஒன்றில் இறுக்கக் கட்டாமல், ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி கொடுத்துக் கட்டலாம்.
நீங்க அதிகமாக டீ குடிக்கிறீங்களா? புற்றுநோய் ஏற்படும் ஜாக்கிரதை
கடிபட்ட காலை நகர்த்தவோ, மடக்கவோ கூடாது. எனவே, அதனை ஒரு கட்டையோடு சேர்த்துக் கட்டிவிடலாம்.
பாம்பு கடித்த இடத்தைச் சுற்றிலும், ஐஸ் கட்டிகள் கொண்டு ஒத்தடம் கொடுப்பது, நல்ல முதலுதவி. இதனால், அந்த இடத்தில் ரத்தம் உறையும் என்பதால், விஷம் ரத்தத்தில் கலப்பது ஓரளவு தடுக்கப்படும்.
சிலர், கடித்த பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார்கள். இதுவும் தவறு. பாம்பைப் பார்த்து எந்தவித சிகிச்சையும் கொடுக்கப்படுவது கிடையாது.
பாம்பை அடிக்க ஓடாமல், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு விரைவாக கூட்டிச் செல்வதே சிறந்தது.
சனியின் வக்கிர பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு அசுப பலன்கள்: எச்சரிக்கை