ஜெயலலிதா படத்தில் ஓவர்டோஸ் கவர்ச்சி.. திருப்பு முனைக் கொடுத்த அந்த திரைப்படம் என்ன தெரியுமா?
“நடிகை ஜெயலலிதா சினிமா விட்டு அரசியலுக்கு சென்றது அவர் அதிகளவு கவர்ச்சி காட்சியது தான்” என முக்கிய பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை ஜெயலலிதா
தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு பின்னர் பிரபலமானவர் நடிகை ஜெயலலிதா தான்.
இவர் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நடித்தார். இந்த திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்தது.
சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயலலிதா ஒரு திரைப்படம் மூலம் தான் அரசியலுக்கு வந்தார் என டாக்டர் காந்தராஜ் கூறியுள்ளார்.
சொந்தமாக எடுத்த திரைப்படம் தோல்வியா?
அதில், கடந்த 1970களின் இறுதியில் ஜெயலலிதா படமொன்று தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதன்படி, “நதியை தேடி வந்த கடல்” என்ற படத்தை தயாரித்தார்.
அதில் ஜெயலலிதா தான் கதாநாயகி, இவருக்கு ஜோடியாக சரத்பாபு நடித்தார். மற்ற படங்களை போல் அல்லாமல் அதிகப்படியான கவர்ச்சி நிறைந்த காட்சிகள் படத்தின் வெற்றிக்காக வைக்கபட்டது.
அப்போது படம் சென்சாருக்கு சென்ற போது அவர்கள் கவர்ச்சி காட்சிகளை நீக்கி விட்டார்கள். இதன்பின்னர் வெளியாகிய திரைப்படம் பெரியளவில் வெற்றியடையவில்லை.
இதற்கு மேல் சினிமாவில் இருக்க வேண்டாம் என நினைத்து நடிகை ஜெயலலிதா சினிமாவை விட்டு அரசியலுக்குள் வந்து விட்டார்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தியை பார்த்த நடிகை ஜெயலலிதா ரசிகர்கள் சற்று வியந்து போயுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |