ஜெயலலிதா மரணம்! அன்று முதல் இன்று வரை
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வராக இருந்த ஜெயலலிதா.
இதைத்தொடர்ந்து சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன் வெளியான அறிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, இவர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு,
.