ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக உடல் அதிகரிப்பு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உடல் எடை அதிகரிப்பிற்கு பல காரணங்கள் இருந்தாலும், முறையற்ற உணவு பழக்கங்களும் முக்கிய காரணமாக அமைகிறது.
உடல் எடை அதிகரிப்பு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எப்படியாவது எடையை குறைத்து விட வேண்டும் என நினைத்து பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.
இது காலப்போக்கில் அவர்களுக்கே பிரச்சினையாக அமையலாம். மருந்து மாத்திரைகள் வாங்கி குடிப்பதற்கு பதிலாக இயற்கையான முறையில் வீட்டில் கிடைக்கும் சிறுபொருட்களை கொண்டு ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கலாம்.
சமையலறையில் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் வெந்தயத்தை சரியாக பயன்படுத்தினால் உடல் எடையை இலகுவாக குறைக்கலாம்.
ஏனெனின் மனித உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்துக்கள், புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வெந்தயத்தில் உள்ளன. இந்த சத்துக்கள் உடல் எடையை குறைத்து வயிற்றை சுத்தம் செய்து விடும்.
அந்த வகையில், வெந்தயத்தை வைத்து எப்படி ஒல்லியான இடையை பெறலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1. வெந்தய நீர்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயம் போட்டு நீர் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும். இரவு முழுவதும் நன்றாக தண்ணீரில் ஊறிய தண்ணீரில் ஏகப்பட்ட பலன்கள் உள்ளன. உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் எடை வேகமாக குறைய இந்த தண்ணீர் உதவியாக இருக்கும்.
2. வெந்தயம்+ தேன்
வெந்தயம்+ தேன் கலந்து குடிக்கும் பொழுது உடல் எடையை குறையும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். வெந்தயத்தை பேஸ்ட் போன்று அரைத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு ஹீரோயின் போன்று தோற்றமளிப்பீர்கள். அதே சமயம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
3. வெந்தய டீ
உடல் எடையை வேகமாக குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வெந்தய தண்ணீர் குடிப்பதற்கு சிரமமாக இருந்தால் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் வெந்தயம் போட்டு கொதிக்க விட்டு பாதியாக தண்ணீரை வடிக்கட்டி எடுத்து குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |