கூந்தல் காடு மாதிரி வளரணுமா? இந்த ஹேர் மாஸ்க்கை ஒரு முறை போடுங்க... அப்புறம் விடவே மாட்டீங்க!
பொதுவாகவே பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி அவர்களின் முக அழகை பராமரிப்பதில் கூந்தலுக்கு முக்கிய பங்கு காணப்படுகின்றது.
அதனால் தான் தங்களின் கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அனைவரும் அதிக அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் தற்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சந்தைகளில் அதிகளவில் பெருகிப்போன இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வலுவிழக்கும் பிரச்சினைகள் அதிகரித்துவிட்டது.
இந்த பிரச்சினைக்கு அதிக செலவு, மற்றும் பக்கவிளைவுகள் அற்ற தீர்வு வேண்டுமா? வீட்டிலேயே செய்ய கூடிய துளசி மற்றும் வேம்பு ஹேர் மாஸ்க்கின் நன்மைகள், செய்முறை, பயன்படுத்தும் முறை தொடர்பான முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேம்பு- துளசி நன்மைகள்
வேப்ப இலைகள் இயற்கை கிருமிநாசினியாக செயற்படுகின்றது. இது ஆபத்தான நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களை தலையில் இருந்து அகற்றி, கூந்தல் வளர்ச்சிக்கு தடையாக அமையும் அரிப்பு, பொடுகு மற்றும் உச்சந்தலையில் தொற்றுகளைக் நீக்குகின்றது.
அதுபோல் துளசி, முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதால், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை இயற்கையாகவே அதிகரிப்பதற்கு பெரிதும் துணைப்புரியும்.
முடி வளர்ச்சிக்கு விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்தி பணத்தையும் அதிகளவில் செலவு செய்வது பக்கவிளைவுகளையும் பெறுவதற்கு பதிலாக கூந்தலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத இந்த துளசி மற்றும் வேம்பு ஹேர் மாஸ்க்கை வீட்லேயே செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
வேம்பு இலைகள்
துளசி இலைகள்
தேங்காய் எண்ணெய் - 3 தே.கரண்டி
கற்றாழை ஜெல் - 4 தே.கரண்டி
தேயிலை மர எண்ணெய் - 1/2 தே.கரண்டி
செய்முறை
முதலில் துளசி மற்றும் வேப்ப இலைகளை தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவை இரண்டையும் சிறிதளவு தண்ணீரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில், தேங்காய் எண்ணெய் லேசாக சூடாக்கி சேர்த்து இந்த கலவையை நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கற்றாழை ஜெல் மற்றும் தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து பேஸ்டாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த மாஸ்க்கை தலையில் தவிட 15 நிமிடங்களுக்கு அப்படியே உலர விட்டு கழுவினால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறுவதுடன் வாரத்தில் இரண்டு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |