வெறும் என்டர்டைமன்ட்டிற்காக மாத்திரம் பிக் பாஸ் சென்றேன்! கேமராவின் முன் உண்மையை எதிர்பாராமல் கூறிய கதிரவன்
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த காரணத்தை கேமராவின் முன் போட்டுடைத்து ரசிகர்கள் முகத்தில் கரியை பூசிய கதிரவனின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 போட்டியாளர்களுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது. இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் மைனா நந்தனி 21 ஆவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் உள்நுழைந்தார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. இதனால் அவரை வெளியேற்றுமாறு பல தடவைகள் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் பதறிய நிலையில், இவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவரை அடுத்து சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி, செரீன், தனலெட்சுமி, ஜனனி, மணிகண்டன், ஆயிஷா, ராம் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதில் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் டபுள் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இவர்களின் எவிக்ஷனுக்கு பின்னர் மற்றுமொரு டபுள் எவிக்ஷனில் அமுதவாணன் மற்றும் மைனா இருவரும் வெளியேற்றப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதுக்கு மாறாக அமுதவாணன் பணப்பெட்டியுடனும் இவர் மக்கள் எவிக்ஷன் எனும் பெயரில் வெளியேற்றப்பட்டார்கள்.
டைட்டில் வின்னர் கொடுத்த பதிலடி
இந்த நிலையில் அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் கடைச்சுற்று வரை சென்று அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
இவரின் வெற்றி மக்களால் தரப்பட்ட வெற்றி என்பதால் போட்டியாளர்கள் உட்பட கமல் அவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. வெற்றியிலும் தனி ஆளாக நின்று மக்களின் மனதை வென்ற அசீம் இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்த “வெற்றி மக்களால் எனக்கு கொடுத்த வெற்றி இதனை யாரும் கவலை பட வேண்டாம்” என கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கதிரவன் பிரபல தொலைக்காட்சியில் பேட்டியொன்றில் பிக் பாஸ் வீட்டிற்கு வெறும் என்டர்டைமன்ட்டிற்காக மாத்திரமே சென்றாக கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் வர வேண்டும் என்றும், மக்களுக்கு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் சில போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 6 ல் சென்றார்கள்.
கொந்தளிக்கும் வாக்காளர்கள்
ஆனால் இவர் கூறிய பதில் கதிரை 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் வைத்திருந்த ரசிகர்களுக்கு பெறும் முகரடியாக விழுந்துள்ளது. இவர் இந்த விடயத்தை பல முறை அழுத்திக் கூறியுள்ளார்.
அந்தவகையில் இவரின் பேட்டி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், “இவரின் என்டர்டைமன்ட்டிற்காக தான் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தீர்கள், எங்களின் வாக்குகள் வீணாகியது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.