பிக்பாஸில் டபுள் எவிக்ஷன்! இந்த வாரம் அதிரடியாக வெளியேறப்போகும் இலங்கை பிரபலம்!
பிக் பாஸிலிருந்து டபுள் எவிக்ஷனில் வெளியேற போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியேறிய போட்டியாளர்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் பிக் பாஸ் நிகழ்சியில் தற்போது சீசன் 6 ஆரம்பித்துள்ளது.
சுமார் 21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசனில் தற்போது வரை 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்து வெளியேறினார் இதனை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வாரம் வெளியேறிய குயின்சி சுமார் ரூ 1.60 லட்சம் வரை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
டபுள் எவிக்ஷன்
இதனை தொடர்ந்து தற்போது வரை பிக் பாஸ் சீசன் 6 , 57 நாட்களை கடந்துள்ள நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதால் நாமினேஷனில் சிக்கிய ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோரில் பிக் பாஸ் வீட்டை விட்டு ராம் வெளியேறுவார் என உறுதியான நிலையில் மற்றுமொரு போட்டியாளராக adk என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வாரம் தலைவர் டாஸ்க்கில் மணிகண்டன் வெற்றிப் பெற்றதால் மணி கண்டன நாமினேஷனிலிருந்து தப்பிவிட்டார். ஆனால் அடுத்த வாரம் இவர் வெளியேற வாய்ப்புக்கள் இருக்கிறது.