சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு ஜாக்பாட்
சூரியன் நட்சத்திர பெயர்ச்சியினால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்து கொட்டும் நிலையில், அந்த ராசியினரை குறித்து தெரிந்து கொள்வோம்.
சூரிய பெயர்ச்சி
சூரியன் புகழ், மரியாதை, மன உறுதி இவற்றிற்கு காரணகரான இருக்கும் நிலையில், ஒருவரது ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றிருந்தால், வாழ்க்கையில் தலைமைத்துவ பண்புகளில் உச்சம் பெற்றிருப்பார்களாம்.
துணிச்சலோடு பல சாதனைகளை செய்வதுடன், இந்த சூரிய பெயர்ச்சியினால் சில ராசியினருக்கு தாக்கம் ஏற்படும் நிலையில், சில ராசியினருக்கு லாபமாகவும் அமையும்.
இன்னும் சில தினங்களில் அதாவது ஏப்ரல் 27ம் தேதி அன்று நள்ளிரவு 1.24 மணிக்கு சூரியன் பரணி நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்கின்றார்.
இந்த காலக்கட்டத்தில் எந்தெந்த நான்கு ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினர் இந்த சூரிய பெயர்ச்சியால் அதிக நன்மையை பெறுவதுடன், 27ம் தேதியிலிருந்து பொற்காலம் ஏற்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் காணப்படும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். அதே போன்று நீங்கள் பணியிடத்தில் பாராட்டையும், புகழையும் பெற்றுத்தரும். புதிய வருமான வழிகளும் கிடைப்பதுடன், வாழ்க்கையில் அமைதியும் காணப்படும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த சூரிய பெயர்ச்சியினால் அதிக நன்மை கிடைக்கும் நிலையில், தொழில் முயற்சிகளில் நல்ல லாபத்தினை எதிர்பார்க்கலாம்.
நீண்ட நாட்களாக தேங்கியிருக்கும் வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வருவதுடன், பரம்பரை சொத்துக்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். நிதி நிலை மேம்படுவதுடன், வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த நட்சத்திர மாற்றத்தினால் தொழில் மற்றும் வாழ்க்கையில் அளவற்ற நன்மை கிடைப்பதுடன், பன்னாட்டு நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பும் கிடைக்குமாம்.
திடீரென நிதி ஆதாயம் அதிகரிக்கும் அறிகுறிகள் காணப்படுவதுடன், தொழிலும் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் காணப்படும்.

கும்பம்
கும்ப ராசியினர் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் மகத்தான வளர்ச்சியினை பெறுவதுடன், தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தினை அடைவார்கள்.
நீண்ட காலமாக முடங்கியிருந்த வேலைகள் அனைத்தும் தற்போது சாதகமாக காணப்படுவதுடன், வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகின்றது.

சூரியனின் அருள் பெறுவதற்கு, காலையில் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம். அதுமட்டுமின்றி ‘ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்’ என்ற சூரியன் காயத்ரி மந்திரத்தையும் கூறலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |