நீங்கள் டைட்டில் வின்னர் இல்லை: பிக்பாஸ் விக்ரமனுக்கு திருமாவளவன் கொடுத்த பரிசு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளனை சந்தித்திருக்கிறார்.
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதில் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருந்து இறுதிவரை வந்து விளையாடியவர் தான் விக்ரமன்.
இறுதியாக 21 போட்டியாளர்களில் இருந்து அசீம், விக்ரமன், ஷவின் ஆகியோர் பைனல் வரை சென்றார்கள். டைட்டில் வின்னராக விக்ரமன் தான் வெல்வாரென அதிகம் எதிர்ப்பாக்கப்பட்டது ஆனால் இறுதியில் அசீம் டைட்டிலை வென்றார், இரண்டாம் இடத்தை விக்ரமனும், மூன்றாம் இடத்தை ஷிவின் பெற்றிருந்தார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு அனைவரும் வெளியில் தற்போது வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மக்களும் அவர்களின் ஆதரவையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவனைச் சந்தித்த விக்ரமன்
இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் விக்ரமனுக்கு பல வகையில் சப்போர்ட் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை விக்ரமன் பதிவிட்டிருக்கிறார் அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது.
தலைவர் திருமாவளவன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். கட்டித்தழுவி வரவேற்று “அற வேந்தன்” புத்தர் சிலை பரிசளித்தார். இதைவிட உயரிய பரிசு வேறென்ன இருக்க முடியும். நெகிழ்ச்சியான தருணம். #அறம்வெல்லும்" என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, விக்ரமனுடனான சந்திப்பு குறித்து திருமாவளவன் டுவிட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில்,
"அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த தம்பி விக்ரமன் அவர்களை வரவேற்று வாழ்த்தினேன். பொழுது போக்குத் தளமெனினும் அதனைக் கருத்தியல் களமாக்கிய சாதனையைப் பாராட்டினேன். நீங்கள் #TITLE_WINNER அல்ல #TOTAL_WINNER என ஆரத்தழுவி மெச்சினேன். ஆடைபோர்த்தி அறவேந்தன் சிலை பரிசளித்தேன். #BiggBoss" என குறிப்பிட்டுள்ளார்.