உள்ளங்கை மற்றும் காலில் வியர்வை வருவதற்கு காரணம் என்ன?
நமது உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வியர்வை வருவதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வியர்வை
பொதுவாக மனிதர்களின் உடம்பில் நடக்கும் விஷயங்களில் ஒன்று தான் வியர்வை. இவை இயல்பான ஒன்றாக என்று எடுத்துக்கொண்டாலும் இதுவே அதிகமாக வியர்வை வெளியேறினால் சில பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.
குறிப்பாக முகம், நெற்றி, கழுத்து, உள்ளங்கை, பாதங்கள் இவற்றில் இயல்பை விட அதிகமாக வியர்வை வெளியேறினால் அதற்கான காரணத்தை அரிந்து சிகிச்சை எடுக்க வேண்டுமாம்.
யாருக்கு இந்த பிரச்சனை ஏற்படும்?
ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வியர்வை அதிகமாக ஏற்படுவது உண்டு.
வியர்வை காரணமாக துர்நாற்றம் ஏற்பட்டால் பிரச்சனை ஏற்படும் என்பதால் அதிகமான வியர்வைக்கு சில அன்றாட பழக்கங்களை சற்று மாற்றிக் கொள்ளலாம்.
Image: ©crdjan/Fotolia
குறிப்பாக தினமும் இரண்டு முறை குளிப்பதுடன், காட்டன் உடைகளை மட்டுமே அணிய வேண்டும். மன அழுத்தத்தையும் குறைக்க வேண்டும்.
Image courtesy: Adobe Stock
இவை எதுவும் பலனளிக்கவில்லை என்றால் மருத்துவரிடம் காண்பித்து வியர்வைக்கு காரணத்தை பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |