எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு மாரிமுத்துவிற்கு ஒரு நாள் சம்பளமாக எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மாரிமுத்து நடித்து வருகிறார். இவருக்காக தான் இந்த சீரியல் பார்ப்பார்கள் என்று கூட கூறலாம்.
அத்தனை ஆண்கள், பெண்கள் இருக்கும் வீட்டில் நான் தான் ராஜா என இருந்து வருபவர் தான் குணசேகரன்.
பெண்களை அடிமைப்படுத்தி அவர்களுக்கு ஏற்ப வைத்திருக்கும் குணசேகரனுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என குணசேகரன் வீட்டு பெண்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் வாரத்திற்கு ஏழு நாட்களும் ரசிகர்களுக்காக ஒளிபரப்பாகப்படுகின்றது.
ஒரு நாள் சம்பளம்
இந்த நிலையில் அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டி கொள்ளும் குணசேகரன் இந்த சீரியலுக்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமில்லாமல் சக நடிகர்களும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
- மாரிமுத்து - ரூ.20 ஆயிரம்
- மதுமிதா, கமலேஷ், ஹரிப்பிரியா - ரூ.15ஆயிரம்
- சக்தி, கனிகா - ரூ.12 ஆயிரம்
- சபரி, பிரியதர்ஷினி - ரூ.10 ஆயிரம்
இந்த செய்தியை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளார்கள். இந்த சம்பளத்திற்கு தான் இவ்வளவு நடிப்பா என மாரிமுத்துவை ரசிகர்கள் கலாய்த்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |