Ethirneechal: வீட்டில் கைதியாகிய ரேணுகா, நந்தினி! ஜனனியின் ஹோட்டலுக்கு வந்த சிக்கல்
எதிர்நீச்சல் சீரியலில் வீட்டை விட்டு இனி வெளியே செல்லக்கூடாது என கதிர் ரேணுகா மற்றும் நந்தினிக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுக்க வேண்டிய இடையூறுகளை திரும்பி வந்த அவரது தம்பி கதிர் மற்றும் ஞானம் கொடுத்து வருகின்றனர்.

கதிருடன் தற்போது ஞானமும் சேர்ந்துள்ள நிலையில், தாராவை வைத்து மிரட்டி வருகின்றனர். அதாவது தாராவை தன்னுடன் அழைத்துச் செல்ல நந்தினி முற்பட்ட நிலையில், அவரை விடாமல் தடுத்து அறிவுக்கரசி அறையில் அடைத்து வைத்துள்ளார்.
நந்தினி, ரேணுகா இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ள நிலையில், அவர்களை வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று மிரட்டவும் செய்துள்ளனர்.
குணசேகரின் அடுத்த ரூபமாக கதிர் உள்ள நிலையில், இந்த பிரச்சனையிலிருந்து ரேணுகா, நந்தினி எவ்வாறு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் ஜனனியின் ஹோட்டலில் ரவுடிகள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |