எதிர்நீச்சல் குணசேகரனுக்கு எதிராக பொலிஸில் புகார்: கூட்டாக படையெடுத்த ஜோதிடர்கள்
எதிர்நீச்சலில் நடித்து வரும் மாரிமுத்துவிற்கு எதிராக 30 ஜோதிடர்கள் காவல் நிலையத்தில் பல புகார்களை முன்வைத்த விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.
ஆதிகுணசேகரன்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டலான நடிப்பை நடித்து வருபவர் தான் மாரிமுத்து மணிரத்னம்.
இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்னர் வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடமும் மாரிமுத்து உதவி இயக்குநராக பணியாற்றி அதற்குப்பிறகு சில படங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.
அதிகரிக்கும் குற்றச்சாட்டுக்கள்
இந்நிலையில் அண்மையில் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டிருந்த மாரிமுத்து ஜோதிடம் குறித்து நம்பிக்கை இல்லை என பேசியிருந்தார்.
மேலும், ஜோதிடர்கள் தான் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் எனவும் சொன்ன விடயத்தால் அந்த நிகழ்ச்சியில் வைத்தே நிறைய வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தது ஆனால் மாரிமுத்துக் கேட்ட கேள்விகளுக்கு ஜோதிடர்கள் பதிலில்லை.
இதனால் ஆறுமுகம் எனும் ஜோதிடர் மாரிமுத்துவிற்கு சம்மன் ஒன்றை அனுப்பியிருந்தார் அதற்கு விளக்கம் கொடுக்கவில்லை என்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பின்னர் 30இற்கும் அதிகமான ஜோதிடர்கள் திருசெங்காடு பொலிஸ் நிலையத்தில் புகாரளித்து இருந்தனர். இதனைத்தொடர்ந்து மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் நிலையத்தில் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இவர் கைது செய்யப்படுவாரா? இதனால் சீரியலுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? என்று ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |