இந்த சீரியலில் இப்படியொரு கதாப்பாத்திரத்தில் நடிக்க இதுதான் காரணம்... முதன்முறையாக மனம் திறந்த குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் மிரட்டலான நடிப்பைக் கொடுத்து வரும் ஆதிகுணசேகரன் இந்த சீரியல் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரிமுத்து மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடமும் மாரிமுத்து உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதற்குப்பிறகு சில படங்களில் நடித்து வந்தவர்.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு அபரீதமாக இருக்கிறது. அவருடைய முகபாவனை ஒரு நிஜ கதாப்பாத்திரத்தைப் பார்ப்பது போல அமைந்திருக்கும்.
இதுதான் காரணம்
வில்லனாக மிரட்டி வரும் ஆதிகுணசேகரன் தான் எப்படி இந்த சீரியலில் நடிக்க வந்தேன் என்பதை குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது,
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது தனக்கு நிறைய வாய்ப்புகள் வந்ததாகவும் தொடர்ந்து இனி சினிமாவில் நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் தான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேண்டும் என்றுக் கேட்டு திருசெல்வம் கேட்டிருக்கிறார்.
எதுவும் யோசிக்காமல் சரி என்று சொல்வி விட்டேன் ஏனெனில் இவரின் கோலங்கள் சீரியல் மாபெரும் வெற்றி பெற்றது அதனாலேயே ஓகே சொல்லியிருக்கிறார்.
அதற்குப் பிறகும் அவர் தொடர்ந்து 3 மணிநேரம் கதையை சொன்னதும் இதில் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். அது மட்டுமில்லாமல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் கிழக்கு வாசல் சீரியலிலும் இவரை நடிக்க அழைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |