ஆதிகுணசேகரனின் மனதிற்குள் புதைந்திருக்கும் காதல்: திடீரென மனம் திறந்து கூறிய உண்மை
எதிர்நீச்சல் சீரியலில் மிரட்டலான நடிப்பை காட்டிவரும் ஆதிகுணசேகரனின் காதல் பற்றி அவரே கூறியிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரிமுத்து மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடமும் மாரிமுத்து உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அதற்குப்பிறகு சில படங்களில் நடித்து வந்தவர். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிகை கன்னிகாவிற்கு கணவனாகவும், 3 தம்பிகளுக்கு மூத்த அண்ணனாகவும் பெண்களை வேலைக்காரிகளைப்போல் நடத்தும் ஒரு கர்வமாக ஆணாகவும் நடித்திருக்கிறார்.
இந்த சீரியலில் இவரின் நடிப்பு அபரீதமாக இருக்கிறது. அவருடைய முகபாவனை ஒரு நிஜ கதாப்பாத்திரத்தைப் பார்ப்பது போல அமைந்திருக்கும்.
காணாமல் போன காதல் கடிதம்
சீரியலில் அனைவரையும் அடக்கி வைக்கும் திமிரான குணம் கொண்ட ஆதிகுணசேகரனின் மனதிற்குள்ளும் ஒரு காதல் கதை உள்ளதாம். ஒரு நிகழ்ச்சியில் காதல் பற்றிக் கேட்டதற்கு அவர் அழகாக ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார்.
அது என்னவென்றால், கல்லூரி படிக்கும் போது காதல் என்பது எல்லோருக்கும் தோன்றியிருக்கும். அந்தக் காதல் இல்லாமல் யாரும் கடந்து வந்திருக்க முடியாது.
அப்படி நானும் எனது கல்லூரி காலத்தில் என்னையும் ஒருவர் காதலித்திருக்கிறார். அதை அவர் வெளிப்படையாக ஒரு கடிதத்தில் எழுதி கொடுத்திருந்தார், பதிலுக்கு நானும் காதல் கடிதம் கொடுத்திருக்கிறார்.
அந்தக் கடித்தத்தை ரொம்ப நாட்களாக பத்திரமாக வைத்திருந்தேன். அது எப்படியோ காலப்போக்கில் காணாமல் போய்விட்டது என வருத்தத்தோடு தெரிவித்திருந்தார்.